01
Mar
ஓம் ஸ்ரீ சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். ஸ்வாமியின் திருவருளால் 28-02-2021 அன்று தஞ்சாவூர் சீனிவாசபுரம் சமிதியின் 17ஆம் ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. இருபதிற்கும் மேற்பட்ட சேவாதள தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணிக்கு வேத பாராயணத்துடன் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதன் பிறகு சிறப்பு பஜனை வழிபாடு நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட தலைவர், மாவட்ட ஆன்மீக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் மண்டல மகளிர் சேவை ஒருங்கிணைப்பாளர் அனைவரும் சிறப்புரை வழங்கினார்கள். மங்கள ஆரத்தியுடன் விழா இனிதே நிறைவுற்றது.
ஜெய் சாய்ராம்
ஸ்ரீ எம் ஸ்ரீனிவாசன் , மாவட்ட தலைவர், தஞ்சாவூர்
email: saisrinivasan.kmb@gmail.com