District President: Sri Velumani R
Email: [email protected]
Aum Sri Sairam
Loving Sairam to all🙏 With Swami’s grace and blessings, a comprehensive medical camp at Poondi Village (2-hour drive from Kodaikanal) was organised by SSSSO, Dindigul district- Sai Sruthi, Kodaikanal on 30th July 2023 with the support of volunteers from SST & 42 members from PSG Hospital Team that include Doctors & Paramedics.
558 beneficiaries in total were benefited across major departments such as General Medicine, Gynaecology, Gastroenterology, Paediatrics, Orthopaedics, Ophthalmology, Dermatology, Cardiology (Both ECG & Echo were included), 25 in-patients were identified, and 9 of them were taken for advanced medical support towards cardiovascular disease, breast cancer, oncology, orthopaedics, etc.
400 packets of Narayana Seva, 450 packets*500 grams of Sai protein) were distributed to women & children. Free medications were also provided to the beneficiaries.
As a part of the event, 10 saplings of Prema Tharu
were planted by the SSSSO, PSG, and SST teams.
35 Youth volunteers from the districts of Dindugal, Erode, Namakkal, Virudunagar, Coimbatore, Madurai, salem, Kanchi North, Thanjavur, 15 Senior members, 20 volunteers from Poondi, Panchayat President, local body members extended their support for conducting the medical camp, 10 mahilas & Convenor from Kodaikanal Munjikal Samithi, District Presidents of Dindugal and Theni, State Youth Coordinator (Gents) of TN-South have participated in the Divine Seva.
Program concluded with Mangala Aarathi and Prasadam distribution.
Samastha Loka Sukhino Bhavantu
Jai Sai Ram
Aum Sri Sairam. On July 30th, 2023, We have Comprehensive Medical Camp seva at Poondi, A Tribal village near Kodaikanal, Dindigul District.
Medical Camp timings: 9am to 2pm.
Transportation facilities and Stay are also arranged from Kodaikanal Sai Sruthi.
Requesting all Sevadals to use this opportunity and take part in this Noble service.
“Selfless service is perhaps the single, most efficient and universal tool for understanding, experiencing and expressing this Divine Principle of Love. Service is love in action” – Sri Sathya Sai Baba.
Volunteers registration link: https://rb.gy/wr9kr
Jai Sairam
ஓம் ஸ்ரீ சாய்ராம். ஜுலை 30, 2023 அன்று, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிற்கு அருகில் உள்ள பூண்டி என்னும் பழங்குடி கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம், காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும். கொடைக்கானல் சாய் ஸ்ருதியில் இருந்து போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேவாதளர் அனைவரும் இந்த மகத்தான வாய்ப்பை பயன்படுத்தி சேவையில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
“தன்னலமற்ற சேவை என்பது அன்பின் தெய்வீகக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும், அனுபவிப்பதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒற்றை மற்றும் உலகளாவிய கருவியாகும். அன்பு கலந்த செயலே சேவையாகும்” – ஸ்ரீ சத்ய சாய் பாபா
ஜெய் சாய்ராம்
Volunteers registration link: https://rb.gy/wr9kr
Loving Sairam to all🙏
With Swami’s grace and blessings, a comprehensive medical camp at Poondi Village (2-hour drive from Kodaikanal) was organised by SSSSO, Dindigul district- Sai Sruthi, Kodaikanal on 30th July 2023 with the support of volunteers from SST & 42 members from PSG Hospital Team that include Doctors & Paramedics.
558 beneficiaries in total were benefited across major departments such as General Medicine, Gynaecology, Gastroenterology, Paediatrics, Orthopaedics, Ophthalmology, Dermatology, Cardiology (Both ECG & Echo were included), 25 in-patients were identified, and 9 of them were taken for advanced medical support towards cardiovascular disease, breast cancer, oncology, orthopaedics, etc.
400 packets of Narayana Seva, 450 packets*500 grams of Sai protein) were distributed to women & children. Free medications were also provided to the beneficiaries.
As a part of the event, 10 saplings of Prema Tharu were planted by the SSSSO, PSG, and SST teams.
35 Youth volunteers from the districts of Dindugal, Erode, Namakkal, Virudunagar, Coimbatore, Madurai, salem, Kanchi North, Thanjavur, 15 Senior members, 20 volunteers from Poondi, Panchayat President, local body members extended their support for conducting the medical camp, 10 mahilas & Convenor from Kodaikanal Munjikal Samithi, District Presidents of Dindugal and Theni, State Youth Coordinator (Gents) of TN-South have participated in the Divine Seva.
Program concluded with Mangala Aarathi and Prasadam distribution.
Samastha Loka Sukhino Bhavantu
Jai Sai Ram
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் 23/07/23 ஞாயிறு அன்று கொடைக்கானல் – குருசாமிபள்ளம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இரண்டு மருத்துவர்கள், 7 மகிளா சேவாதள் இரண்டு ஆண் சேவாதள் மற்றும் 7 பாலவிகாஸ் மாணவர்கள் சேவை பணியில் பங்கேற்றனர்.
கிராம மக்கள் 149 பேர் மருத்துவ முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.
மருத்துவ முகாமை மூஞ்சிகல் சமிதி கன்வீனர் மற்றும் சமிதி பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து பகவானின் அருளாசி பெற்றனர்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் திவ்ய அருளால் இன்று 21/07/23 ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை சாய் சுருதியில் நடைபெற்றது .
பூஜையில் 53 மகிளாஸ் மற்றும் சேவையில் 10 மகிளாஸ் கலந்து கொண்டு சாயி அன்னையின் அருளாசி பெற்றனர்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் திவ்ய அருளால் இன்று 21/07/23 ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை மூஞ்சிகல் சமிதி கொடைக்கானலில் நடைபெற்றது .
பூஜையில் 27 மகிளாஸ் மகிளாஸ் கலந்து கொண்டு சாயி அன்னையின் அருளாசி பெற்றனர்.
ஜெய் சாய்ராம்
9th July 2023
Sairam. 1008 Gayatri Mantra chanting @ Munjikal Samiti – Kodaikanal with Sai blessings
Today 1008Gayathri Mantra chanting @ AB Nagar Bhajan mandali with Sai blessings
Jai Sairam
Sairam, distibuted Bhagwans Gurupoornima special gift colouring pencil set and books @ Thiruvallur nagar ,Gurusamypallam Vilpatty and Kovilpatty Village Balvikas Students nearly 100 sets with Sai blessings
Jai Sairam
கண் சிகிச்சை முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம. பகவானின் அருளால் 11/06/23 ஞாயிறு அன்று கொடைக்கானல் – சாய் ஸ்ருதி வளாகத்தில் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினரால் மாபெரும் கண் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முகாமில் 247 பயனாளிகள் பங்கேற்றனர். 37 பயனாளிகள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யபட்டு தேனி அரவிந்த் கண் மருத்துவமனை க்கு அழைத்து செல்லப்பட்டனர். முகாமை கொடைக்கானல் சமிதி மற்றும் மூஞ்சிகல் சமிதி கன்வீனர்கள், சமிதி சேவை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சேவாதள தொண்டர்கள்/மகிளாஸ் சிறப்பாக ஏற்பாடு செய்து சேவையாற்றினர்.
தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் மற்றும் 16 செவிலியர்கள்/ஊழியர்கள், கோடை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் மூன்று ஊழியர்கள்/செவிலியர் முகாமை சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.
அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். பகவானுக்கு நன்றி
ஜெய் சாய்ராம்
தத்து கிராமம் கொடைக்கானல்- கோவில்பட்டியில் பொது மருத்துவ முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் 02/04/23 ஞாயிறு அன்று நமது தத்து கிராமம் கொடைக்கானல்- கோவில்பட்டியில் பொது மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திரு. Dr. முத்தையா அவர்களின் மேற்பார்வையில் சுமார் 117 பயனாளர்கள் மருத்துவ சேவை மற்றும் மருந்துகளை பெற்று பயனடைந்தனர்.
மூஞ்சிகல் சமிதி கன்வீனர் மேற்பார்வையில் 5 ஆண் சேவாதள் மற்றும் 8 மகிளா சேவாதள் சிறப்பாக சேவை பணியாற்றி பகவானின் அருளாசி பெற்றனர்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் ஸ்ரீராம நவமி சிறப்பு பஜன் ஸாய் ஸ்ருதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோடைகானல் சாயி சமிதிகளை சார்ந்த மகிளாஸ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பகவானின் ஆசிகளை பெற்று சென்றனர்.
ஜெய் சாய்ராம்
உளவார பணி சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் திவ்ய அருளால் நேற்று 03/4/03 திங்கள்கிழமை காலை 10.30 – 1.30 மணி வரை எம்விஎம் நகர் தென் திருப்பதி கோவிலில் உளவார பணி சேவை சிறப்பாக நடந்தேறியது. 11 மகிளாஸ் சேவையில் கலந்து கொண்டு பகவானின் அருளாசி பெற்றனர் .ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் கொடைக்கானல் அரசு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொடைக்கானல் டவுன் சமிதி சார்பில் பேபி கிட் வழங்கும் சேவை சாயி மகிளாஸ் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மார்ச் மாதம் 15 குழந்தைகளுக்கு பேபி கிட் வழங்கப்பட்டுள்ளது.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய் ராம். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் திவ்ய அருளால் இன்று 04.04.2023 கொடைக்கானல் குறிஞ்சி குமரனுக்கு காவடி எடுக்கும் நிகழ்வில் சுமார் 2500 பக்தர்களுக்கு கொடைக்கானல் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.
ஜெய் சாய் ராம்
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் நாராயண சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம் . பகவானின் அருளால் 14ம் ஆண்டு பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் நாராயண சேவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சாயி இளைஞர்கள், சேவாதள் மற்றும் சாயி மகிளாஸ் உற்சாகத்துடன் அதிகாலையில் இருந்தே சாயி சேவையில் மகிழ்வுடன் ஈடுபட்டனர்.
நமது சேவைக்கு இடம் அளித்து அனைத்து உதவிகளும் செய்த SSM நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கும், மருத்துவ சேவைக்கு உறுதுணையாக இருந்து நடத்தி கொடுத்த மருத்துவர்களுக்கும் , SKC நிர்வாகம் மற்றும் பணியாளர்களுக்கும்,
அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சாயி அன்பர்களுக்கும் பகவானை பிரார்த்தித்து எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்
ஜெய் சாய்ராம் (date of activity – 31 Jan 2023)
சாய்ராம் பகவானுடைய ஆசிர்வாதத்துடன் பிரசாந்தி சேவா சாதனா முகாம் திண்டுகல் மாவட்டத்தில் இன்று காலை நடைப்பெற்றது. கன்வீனர்,சேவை ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் சேவாதள தொண்டர்களும் கலந்துக் கொண்டு பயன் பெற்றார்கள் .
ஜெய் சாய்ராம்.
மூஞ்சிக்கல் சமிதியின் பிரகதி பதம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் . ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள்….. தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம்…… கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி கொடைக்கானல் மூஞ்சிக்கல் சமிதியின் பிரகதி பதம் நிகழ்ச்சியானது 07/08/2022. ஞாயிற்றுக்கிழமை அன்று சாய் ஸ்ருதியில் நடைபெற்றது……
காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சியானது ஆரம்பமானது. பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சாய் குடும்பத்தினர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.
காலை சிற்றுண்டிக்கு பின்னர் பஜன்,, அகில இந்திய தலைவரின் உரையோடு ஆரம்பம் ஆனது. பகவான் அருளிய பிரகதி பதத்தை *மதுரை மாவட்ட தலைவர் திரு.நாராயணசாமி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.காலை 11 மணி முதல் 11 .10 மணி வரை தேநீர் இடைவெளியுடன் தொடர்ந்த,,, நிகழ்ச்சியானது மதியம் ஒன்று ஐம்பது மணிக்கு மங்கள ஆரத்தி யோடு நிறைவுபெற்றது.
இன்றைய பிரகதி பதம் நிகழ்ச்சியில் 128 சாய் குடும்பத்தினர் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் பகவானின் அன்பு பரிசு வழங்கப்பட்டது. நாராயண சேவையோடு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
மதியம் 3 மணி அளவில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் அவர்கள் பிரசாந்தி கொடிக்கு மங்கள ஆரத்தி காட்டிய பின்பு இன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் 3-2-2022 அன்று
- வானவில் கண்திறன் இழந்தோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மளிகை பொருட்கள்,மூன்று சிப்பம் அரிசி,ஒரு மாதத்திற்கு தேவையான பாலிற்கான பணம், எண்ணெய், சோப்பு வகைகள் வழங்கப்பட்டது.
- தேவையுள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு சிப்பம் அரிசி மற்றும் எண்ணெய், சோப்பு வகைகள் வழங்கப்பட்டது.
வாய்ப்பளித்த பகவானுக்கு நன்றி
ஜெய் சாய்ராம்
பழனி பாதயாத்ரீகர்களுக்கு பாத சேவை
பழனி பாதயாத்ரீகர்களுக்கு பாத சேவை..
மூலிகை தைலம் தேய்த்து வலி நீங்கும் சேவை.
காரைக்குடி சத்ய சாயி சேவாதள தொண்டர்கள்
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் சாயி நாதரின் அருட் பெருங் கருணையால் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி கொடைக்கானல், மூஞ்சிக்கல் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள்
கொடைக்கானல் சாயி குடும்பத்தினர்,, பாலவிகாஸ் குரூப் 1, குரூப் 2 குழந்தைகள் மற்றும் பக்தர்கள்,, சமிதியின் பஜனைக்கு பின்பு, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசுபொருள் வழங்கியும்,,, கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது ..
திரளான சாயி குடும்பத்தினரும் குழந்தைகளும் கலந்துகொண்டார்கள்… மங்கள ஆரத்தி மற்றும் நாராயண சேவையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது …. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு சமிதியின் ஒருங்கிணைப்பாளர்கள். பாலவிகாஸ் குருமார்கள் , மூத்த சாயி குடும்ப உறுப்பினர்கள், பகவானின் ஆசிகளுடன் ஏற்பாடுசெய்திருந்தார்கள்.
ஜெய் சாய்ராம்
BHAGAWAN SRI SATHYA SAI BABA 96TH BIRTHDAY CELEBRATIONS
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் 23/11/21 செவ்வாய் கிழமை சுவாமியின் பிறந்த தின வைபவங்களின் தொடர் நிகழ்வாக நாராயண சேவை வழங்கப்பட்டது.
பழனி சமிதி கன்வீனர் ஏற்பாட்டில் சாயி இளைஞர்கள் மூத்த சாயி உறுப்பினர்கள் சேவைபணியில் ஈடுபட்டு பகவானின் அன்பிற்கு பாத்திரமாயினர்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் 23/11/21 செவ்வாய் கிழமை சுவாமியின் பிறந்த தின வைபவங்களின் தொடர் நிகழ்வாக புண்யம் முதியோர் இல்லத்திற்கு இரண்டு மூடை அரிசி வழங்கப்பட்டது.
பழனி சமிதி கன்வீனர் ஏற்பாட்டில் சாயி இளைஞர்கள் மூத்த சாயி உறுப்பினர்கள் சேவைபணியில் ஈடுபட்டு பகவானின் அன்பிற்கு பாத்திரமாயினர்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் 23/11/21 செவ்வாய் கிழமை சுவாமியின் பிறந்த தின வைபவங்களின் தொடர் நிகழ்வாக 134 உணவு பொட்டலங்கள் சாயி அன்பர்கள் இல்லங்களில் இருந்து சேகரித்து வீதி வாழ் நாராயணர்களுக்கு வழங்கப்பட்டது.
வஸ்த்ரதானம் 10 சேலைகள் வழங்கப்பட்டது.
மகாலட்சுமி நகர் சமிதி கன்வீனர் ஏற்பாட்டில் சாயி இளைஞர்கள் மூத்த சாயி உறுப்பினர்கள் சேவைபணியில் ஈடுபட்டு பகவானின் அன்பிற்கு பாத்திரமாயினர்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் சுவாமியின் 96வது பிறந்த நாள் வைபவத்தின் தொடர் நிகழ்வாக 20/11/21 சனிக்கிழமை அன்று AB நகர் பஜனா மண்டலியில் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு பஜன், மற்றும் குரூப் 2 மற்றும் குரூப் 3 முடித்த பாலவிகாஸ் குழந்தைகளுக்கு பட்டயம் மற்றும் பகவானின் அன்பு பரிசுகள் வழங்கும் நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வுகளை முன்னாள் மாவட்ட தலைவர் திரு.மணிகண்டன் ஏற்பாடு செய்ய. மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.வடிவேல் முருகன் தொகுத்து வழங்கினார்.
மங்கல ஆரத்தி, நாராயண சேவையுடன் இனிதே நிகழ்வு நிறைவு பெற்றது. ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் சுவாமியின் 96வது பிறந்த நாள் விழாவின் தொடர் நிகழ்வாக 20/11/21 சனிக்கிழமை இரவு வீதி வாழ் நாராயணர்களுக்கு 96 போர்வை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சாயி இளைஞர்கள் சேவை பணியில் ஈடுபட்டு பகவானின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமாயினர். ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் . பகவான் சாயி நாதரின் 96வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் நிகழ்வாக, இன்று 20.11.2021 கொடைக்கானல் சாய் சுருதியில் மாலை மூன்று முப்பது மணி முதல் ஐந்து முப்பது மணி வரை விளக்கு பூஜை மற்றும் பஜன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாய் குடும்பத்தினர் அனைவரும் விளக்கு பூஜையிலும் பஜன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பகவானின் அருள் பெற்றுச் சென்றார்கள் . ஜெய் சாய்ராம்.
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் சாயிநாதரின்தொண்ணூத்தி (96) ஆறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக 20 /11 /21 சனிக்கிழமை மாலை நான்கு முப்பது மணி முதல் ஐந்து முப்பது மணி வரை கொடைக்கானல் மூஞ்சிகல் சமிதி பால விகாஸ் மாணவ-மாணவியரின் நாட்டிய நாடகம் ,கலை நிகழ்ச்சிகள் லேக் ரோடு சாய் ஸ்ருதியில் நடைபெற்றது. SSSSO TN மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஆகியோர் குழந்தைகளுக்கு பகவானின் அன்பு பரிசுகளை வழங்கினார்கள்.பிறகு பஜன்,மங்கள ஆரத்தி, நாராயண சேவையோடு 6.30 மணியளவில் பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் . கருணைக்கடலான பகவானின் திருவுள்ளப்படி ,கொடைக்கானல் லேக் ரோடு சாய்சுருதி இல் அகண்ட பஜன் நிகழ்ச்சியானது 14.11.2021 மாலை 4 மணி முதல் 6 மணி வரை பகவானின் அருளோடு நடைபெற்றது. கொடைக்கானலில் உள்ள சாயி குடும்பத்தினர் திரளாக கலந்துகொண்டு பஜன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பகவானின் அருளைப் பெற்றுச் சென்றார்கள்.. கொடைக்கானல் டவுன் சத்திய சாயி சேவா சமிதி சாயி குடும்பத்தினர் மற்றும் சமிதி பொறுப்பாளர்கள் பஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் அகண்ட பஜன் நிறைவு சிறப்பு பஜன் நாகல்நகர் சமிதியில் மாலை 5 pm – 6 pm மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். இன்று 8/11/21 ஸ்ரீலஸ்ரீ ஜோதி மௌனகுரு சுவாமிகள் குருபூஜை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் காலை முதல் நாராயண சேவை திருக்கோவில் சார்பில் வழங்கப்பட்டது.
அதுசமயம் நமது ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன சேவாதள தொண்டர்கள் 6 பேர் மற்றும் மகிளாஸ் 10 பேர் சிறப்பாக சேவை பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மற்றும் கரூரிலிருந்து வந்து சேவை செய்து பகவானின் பூரண நல்லாசியை பெற்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் சுவாமிக்கு நன்றிகள். ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம், இன்று 27/10/21 ஸ்ரீலஸ்ரீ ஜோதி மௌனகுரு சுவாமிகள் அதிஷ்டான கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் காலை முதல் நாராயண சேவை திருக்கோவில் சார்பில் வழங்கப்பட்டது.
அதுசமயம் நமது ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன சேவாதள தொண்டர்கள் 6 பேர் மற்றும் மகிளாஸ் 11 பேர் சிறப்பாக சேவை பணியில் ஈடுபட்டனர். பழனி ,கரூர், வடமதுரை என வெளியூரிலிருந்து வந்து சேவை செய்து பகவானின் பூரண நல்லாசியை பெற்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் சுவாமிக்கு நன்றிகள். ஜெய் சாய்ராம்
New born baby kit distribution
Om Sri Sairam, With the Divine Grace of Bhagwan, The Divine Mother Eswaramba new born baby kit distribution to every child born in the Govt hospital .
Three children were born this week (31 Oct 2021) and provided with the kit containing 2 blankets,5 cloth diapers, baby powder, coconut oil , baby soap, Sai protein powder for the lactating mother along with masks .
Jai Sairam
ஓம் ஸ்ரீ சாய்ராம்
சாய்ராம் அன்பு சகோதர சகோதரிகளுக்கு, பகவானின் அருட் பெரும் கருணையால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இன்று 31.10.22 ஞாயிற்றுக்கிழமை காலை அன்பகம் குழந்தைகள் இல்லத்திற்கு (HIV affected) சென்று 46 குழந்தைகளுக்கு தீபாவளிக்கு ஆடைகள் வழங்கப்பட்டன. பகவானுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி
ஜெய் சாய்ராம்
பேரிடர் மேலாண்மை முதலுதவி விளக்கம் மற்றும் பயிற்சி
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் ஸ்ரீ சத்ய சாயி நாதரின் அருள் ஆசியோடு இன்று 23/10/21 கொடைக்கானல் டவுன் சத்யசாயி சேவா சமிதி ஏற்பாடு செய்த (KODAIKANAL TOWN SATHYA SAI SEVA SAMITHYI) DISASTER MANAGEMENT AWARENESS PROGRAM விருது நகர், மாவட்ட தலைவர் மூலமாக, பேரிடர் மேலாண்மை முதலுதவி விளக்கம் மற்றும் பயிற்சி, கொடைக்கானல் பிஎஸ்என்எல் CNS பெண்கள், குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது..
டவுன் சமிதியின் சேவை ஒருங்கிணைப்பாளர், மகிளா ஒருங்கிணைப்பாளர், பாலவிகாஸ் குருமார்கள், இந்த வகுப்பிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள் . சுமார் 40 குழந்தைகள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.
ஜெய் சாய்ராம்
ஊரக தொழில் பயிற்சி மையம் மறுதொடக்கம்
ஸ்ரீ சாய்ராம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களுடைய பொற்பாதங்களில் அனந்த கோடி நமஸ்காரங்கள். அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்கள் தம்மை அவதாரம் என்று பிரகடனப்படுத்திய தினமாகும். ( Declaration day ) .
இந்தத் தெய்வீக திருநாளை முன்னிட்டு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களுடைய திருவருளால் கொடைக்கானல் சாய் சுருதியில் இயங்கி கொண்டு இருக்கும் ஊரக தொழில் பயிற்சி மையம் (Rural vocational training centre ) கொரோனா பொது முடக்கு காலத்திற்கு பின்பு மறுபடியும் இயங்க துவங்கியது.
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை படித்து வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் ஐந்து பேர் மூன்று மாத கால கணினி வகுப்புகளுக்கு பதிவு செய்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தையல் பயிற்சி வகுப்புகளுக்கு ஏழு பேர் பதிவு செய்தனர்.வருகை தந்தவர்கள் அனைவரையும் வரவேற்று பகவான் அருள் இருக்கக்கூடிய இந்த பயிற்சி மையத்தின் நோக்கம் மற்றும் நன்மைகளை குறித்து கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி கண்வீனர் மற்றும் RVTC ஒருங்கிணைப்பாளர் திரு சாந்த சதீஷ் அவர்கள் எடுத்துரைத்தார்.
பகவானின் அவதார பிரகடனத்தை குறித்து சாய் சுருதி கேர் டேக்கர் திரு சாய் ராம் அவர்கள் உரையாற்றினார். கணினி பயிற்சியாளர் திரு. கண்ணன் சாய்ராம் அவர்களையும் ,தையல் பயிற்சி பயிற்சியாளர்கள் திருமதி சரண்யா சாய்ராம் மற்றும் திருமதி.சத்யா சாய் ராம் அவர்களை ஒருங்கிணைப்பாளர் அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியின் இரண்டாம் பாகமாக கொரோனா பொது முடக்கு காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெய்வீக அன்னை ஈஸ்வராம்பால் பேபி கிட் அதாவது கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஜனனம் ஆகும் ஒவ்வொரு குழந்தைக்கும் துணி டயப்பர் 5 nos , தேங்காய் எண்ணெய் 200 ml பாட்டில் ஒன்று, பேபி சோப், பேபி பவுடர், குழந்தைகளுக்கான கம்பளி 2 nos , மாஸ்க் 2 nos பாலூட்டும் தாய்மார்களுக்கு சாய் சத்துமாவு பாக்கெட் 1nos அடங்கிய கிட் தினந்தோறும் வழங்கும் திட்டம் மறு தொடக்கம் செய்யப்பட்டது.
20 oct தேதி அன்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கும் கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி இன் சேவை ஒருங்கிணைப்பாளர் திரு ராஜசேகர் சாய்ராம், திரு சிவராமன் சாய்ராம் அடங்கிய குழு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி Dr. திருமதி . பொண்ரதி சாய்ராம் அவர்களது முன்னிலையில் வழங்கினர். தினமும் நடைபெற இருக்கும் இந்தத் திட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் இரு சாய் சேவாதல் பொறுப்பேற்று சுவாமியின் பிரசாதத்தை விநியோகம் செய்ய இருக்கின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி சாய் சகோதர சகோதரிகள் மேற்கொண்டனர் .ஓம்காரம் சாய் காயத்ரி மற்றும் பஜனைகள் உடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி பகவானுக்கு ஆரத்தி உடன் நிறைவடைந்தது. ஜெய் சாய்ராம்
ஸ்ரீ சத்ய சாயி காயத்ரி மாதாவின் நவராத்ரி மஹோத்சவம் – வேத மாத்ருகா மஹோத்சவம்
ஓம் ஸ்ரீ சாய்ராம்
காயத்ரி மந்திரம் வேதங்கள் நான்கிறக்கும் முதன்மையாக திகழ்கிறது. வேதங்களுக்கு மட்டும் அல்லாது நம் அனைவருக்கும் அன்னையாகவும் காத்து அருளும் ஸ்ரீ சத்ய சாயி காயத்ரி மாதாவின் நவராத்ரி மஹோத்சவம் – வேத மாத்ருகா மஹோத்சவம் கொடைக்கானல் சாய் ஸ்ருதி வளாகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.நவராத்ரியில் 9 நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நம் சாயி இளைஞர்களால் கொண்டாடபட்டது.ஸ்ரீ சத்ய சாயி காயத்ரியின் 9 நாட்களின் அலங்கரமும் நவ துர்கையின் சிறப்புகளை இத்துடன் இணைத்துள்ளோம்.
https://ssssotn.org/wp-content/uploads/2021/10/Kodai-Navarathri-Mahotsavam-2021.pdf
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவருடைய திருவருளால் 10/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்கள் (இந்தியா) தமிழ்நாடு ,கொடைக்கானல் மதுரை ஹர்ஷிதா மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் சாய் சுருதியில் நிறைவேறியது. முகாமினை கோட்டாட்சியர் திரு முருகேசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
முகாமில் ஆண்கள் பெண்கள் என 346 நபர்கள் வருகை தந்து பயனடைந்தனர் . மேலும் அரசுத்தரப்பில் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி பிரிவில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைந்தனர். 54 கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டு 150 நபர்கள் எக்கோ பரிசோதனை செய்து கொண்டனர். உடனடி சிகிச்சைக்காக 20க்கும் மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஜெய் சாய்ராம்
என்றும் சாய் சேவையில்,
இரா.வேலுமணி மாவட்ட தலைவர். திண்டுக்கல் மாவட்டம்.சாந்த சதீஷ் ,
கன்வீனர், ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனங்கள், சாய் சுருதி , கொடைக்கானல் .
நவராத்திரி கொலு திருவிழா இரண்டாம் நாள்
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பகவான் சாயி நாதரின் அனுகிரகத்தோடு இன்று கொடைக்கானல் டவுன் சமிதி,சாய் குடும்பத்தினர் இன்று இரண்டாம் நாள் நவராத்திரி திருவிழாவை கொண்டாடினார்கள்…. மாலை 6 மணி முதல் 7 மணி வரை பூஜை,பஜன், பகவானுக்கு ஆரத்தி மற்றும் நாராயண சேவையோடு நிறைவு பெற்றது. கொடைக்கானலில் உள்ள சாய் குடும்பத்தினர் மற்றும் பாலவிகாஸ் குழந்தைகள் கலந்துகொண்டு பகவானின் அருள் பெற்றுச் சென்றார்கள்.
ஜெய் சாய்ராம்
நவராத்திரி கொலு திருவிழா முதல் நாள்
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பகவான் சாயி நாதனின் அனுகிரகத்தோடு , இன்று 7.10.2021, கொடைக்கானல் டவுன் சாயி சமிதி ,சாயி குடும்பத்தினர் நவராத்திரி முதல் நாள் கொலு திருவிழாவை கொண்டாடினார்கள் …கொடைக்கானல் சாயி குடும்பத்தினர் மற்றும் பாலவிகாஸ் குழந்தைகள் கலந்து கொண்டு பஜன் நிகழ்ச்சிகள்லோடு,மற்றும் நாராயண சேவையோடு இன்றைய பூஜை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது
ஜெய் சாய்ராம்
மாபெரும் இலவச பேரிடர் (DM) மேலாண்மை பயிற்சி முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களுடைய திவ்ய அருளால் 03/10/2021 அன்று கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் மாபெரும் இலவச பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 65 க்கும் மேற்பட்டோர் காலை அமர்விலும், 14 ஆண்கள் மற்றும் 20 மகிலாஸ் ஆக மொத்தம் 34 பேர் காலை மற்றும் மதிய அமர்வில் பங்கேற்று பயனடைந்தனர். பயிற்சியின் போது முதலுதவி மற்றும் பேரிடர் காலத்தில் நம்மைப் பாதுகாத்துக்கொள்வது மற்றும் பிறரை எப்படி காப்பாற்றுவது பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன . கன்வீனர் திரு சாந்த சதீஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் நடந்த மற்றும் நடக்கக்கூடிய பேரிடர்களை பற்றிக் கூறினார். தமிழ்நாடு SRP ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயராஜ் சாய்ராம் அவர்கள் சேவையில் ஆன்மீகம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பயிற்சி வகுப்புகளை ராஜபாளையம் மாவட்டத் தலைவர் மற்றும் DM ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் சாய்ராம் அவர்களுடைய தலைமையிலான குழு மேற்கொண்டது. நிகழ்ச்சி மேலாண்மையை கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி யினர் மேற்கொண்டனர். வளாக ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பிணை ரா கிளப் சங்கத்தினர் மேற்கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஐந்து வகுப்புகள் அடங்கிய இந்தப் பயிற்சி முகாமில் 2 வகுப்புகள் சிறப்பாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. ஜெய் சாய்ராம்
இலவச பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் . பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களுடைய திவ்ய அருளால் 03/10/2021 அன்று கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் மாபெரும் இலவச பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 65 க்கும் மேற்பட்டோர் காலை அமர்விலும், 14 ஆண்கள் மற்றும் 20 மகிலாஸ் ஆக மொத்தம் 34 பேர் காலை மற்றும் மதிய அமர்வில் பங்கேற்று பயனடைந்தனர். பயிற்சியின் போது முதலுதவி மற்றும் பேரிடர் காலத்தில் நம்மைப் பாதுகாத்துக்கொள்வது மற்றும் பிறரை எப்படி காப்பாற்றுவது பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன .
கன்வீனர் திரு சாந்த சதீஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் நடந்த மற்றும் நடக்கக்கூடிய பேரிடர்களை பற்றிக் கூறினார். தமிழ்நாடு SRP ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயராஜ் சாய்ராம் அவர்கள் சேவையில் ஆன்மீகம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பயிற்சி வகுப்புகளை ராஜபாளையம் மாவட்டத் தலைவர் மற்றும் DM ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் சாய்ராம் அவர்களுடைய தலைமையிலான குழு மேற்கொண்டது.
நிகழ்ச்சி மேலாண்மையை கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி யினர் மேற்கொண்டனர். வளாக ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பிணை ரா கிளப் சங்கத்தினர் மேற்கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஐந்து வகுப்புகள் அடங்கிய இந்தப் பயிற்சி முகாமில் 2 வகுப்புகள் சிறப்பாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. ஜெய் சாய்ராம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்- கொடைக்கானல் டவுன் சமிதி
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளை முன்னிட்டு கொடைக்கானல் டவுன் சமிதியில் பகவானின் அருள் ஆசியோடு 30-8-21 அன்று காலை பத்து முப்பது மணி முதல் 1.00மணி வரை பஜன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட பஜன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சாய் சகோதரர்கள் வந்திருந்து பஜன் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
அதன்பின்பு கிருஷ்ணர் பிறந்த நாளை முன்னிட்டு கொடைக்கானல் பாலவிகாஸ் குழந்தைகளின் மாறுவேட போட்டி,, மற்றும் ஆன்மீக பஜன் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பாலவிகாஸ் குழந்தைகளுக்கு பகவானின் அன்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
மங்கள ஆரத்தி மற்றும் நாராயண சேவையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் டவுன் சமிதியின் சேவை, ஆன்மிக, மஹிளா ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம்
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள்,கொடைக்கானல் மற்றும்தமிழக அரசின் ஆரம்ப சுகாதார துறை. இணைந்து கொடைக்கானல் வில்பட்டி கிராமம் மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படும் வகையில், வில்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் , இலவச கொரோனா தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முகாமில் 278 பெண்களும் , 236 ஆண்களும் என மொத்தம் 514 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைந்தனர். ஸ்ரீ சத்ய சாய் நிறுவனம் ,கொடைக்கானல், முகாம் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் சேவை செயல்பாடுகளை மேற்கொண்டது.
மருத்துவ தடுப்பூசி பணிகளை BMO டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் ஹரிஷ் தலைமையிலான மருத்துவ குழு மேற்கொண்டது. முகாம் வளாக அனுமதி மற்றும் ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் திரு. ராஜா மாரிஸ் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
முகாமிற்கான தூய்மை மற்றும் சுகாதார பணிகளை வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்தது. வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) திரு வாசு, உறுப்பினர்கள் திரு சாய்ராம் பாபு , திருமதி. விமலா பாலகிருஷ்ணன், செயலர் திரு. துரைப்பாண்டி , முகாம் ஏற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தனர். ABDO திரு. எஸ். ஏழுமலையான்அவர்கள் முகாம் பகுதிக்கு நேரில் வந்து மேற்பார்வை மேற்கொண்டார் . இக்கிராம சேவையில் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்களின் கிராம தத்தெடுப்பு திட்டத்தில் இணைந்து பெரும்பங்காற்றி கொண்டிருக்கும் SST (TVS) நிர்வாகிகள் மற்றும் ஏகம் பவுண்டேஷன் ஊழியர்கள் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்றி இம்முகாமில் பங்குபெற செய்து பயனடைய காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் ,மற்றும் சேவையில் பங்கேற்ற அனைத்து சாய் சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
ஜெய் சாய்ராம்
என்றும் சாய் சேவையில் சாந்த சதீஷ்.Sகன்வீனர்,
ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனம்,கொடைக்கானல்.
Date : 21/06/2021