17
Feb
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பகவானின் பேரருளால், ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவின் சார்பாக மாநில அளவிலான முதல் நிலை பயிற்சி முகாம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், தஞ்சாவூர் மாவட்டம் மகர்நோன்பு சாவடியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பேரிடர் காலங்களில் மீட்புப் பணி மற்றும் நிவாரண உதவிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அளவிலான 13 மாவட்டங்களைச் சேர்ந்த 70 இளைஞர்கள் மற்றும் சேவாதள தொண்டர்கள் பங்குபெற்றனர். இப்பயிற்சி முகாமில் மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் 15 பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தார்கள், மேலும் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் மற்றும் அவரது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கன்வீனர்கள் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஜெய் சாய் ராம்,
மாநில பேரிடர்
மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு.