Aum Sri Sairam
சாய்ராம் பகவானின் பெரும் கருணையினாலும், ஆசிகளோடும், 20/02/2021 காலை, மதுரை மத்திய சமிதியால் ஸ்ரீ சத்ய சாய் வித்யா ஜ்யோதி திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப் பட்ட , திருமங்கலம் அருகே சாத்தங்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள க்ஷத்திரிய நாடார் உறவின்முறை உயர்நிலைப் பள்ளியில் மாத்ரு பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 18 மாணவர்கள் தங்கள் தாய்/தந்தைக்குப் பூஜை செய்தார்கள். ஏறத்தாழ 50 மாணவர்களும் மற்றும் பள்ளி ஆசிரியர்களும், ஒரு சில கிராமப் பெரியவர்களும் கண்டு களித்தார்கள்.
மங்கள ஆரத்தியைத் தொடர்ந்து அனைவருக்கும் பகவானின் பிரசாதம் வழங்கப் பட்டது. மத்திய சமிதி உறுப்பினர் திரு மணிவேல், அவர்தம் துணைவியார் திருமதி மஹாலெக்ஷ்மி, அவர்களின் குழந்தைகள் செல்வி சாய் ஸ்ருதி, செல்வன் சாய்நாத் மற்றும் மாநில சேவை ஒருங்கினைப்பாளர் திரு சந்திரன், திருமதி உஷா சந்திரன், மாவட்ட பஜன்/வேதம் ஒருங்கினைப்பாளர் (ஆண்கள்) திரு ஹரிஹரன், மாவட்டத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
ஜெய் சாய்ராம்
திரு நாராயணசாமி ராமநாதன் மாவட்ட தலைவர் மதுரை
Email: arenness@gmail.com