ஓம் ஸ்ரீ சாய்ராம்:
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திருப்பூர் விஜயம் —04.05.1991
1991 மே மாதம் நான்காம் தேதி திருப்பூர் சத்ய சாய் சேவா நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.
பகவான் கஸ்தூரி ஐயாவை அனுப்பி வைத்தார். பிரசாந்தி கொடியை ஏற்றிவைத்து திருப்பூர் ராம்நகரில் *சத்திய சாய் பஜனா மண்டலி துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் ஆசீர்வாதத்தோடு ஸ்ரீ சத்ய சாய் விஹார் திருப்பூர் ராம்நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
சத்ய சாயி மந்திர் துவக்க விழாவிற்கு திருப்பூர் பக்தர்கள் பல ஆண்டுகளாக பகவானிடம் சென்று அழைப்பு விடுத்தனர்.
ஒவ்வொரு முறை எங்கு சென்று அழைத்தாலும் சுவாமி மிக சந்தோஷத்தோடு ஆசிர்வாதம் செய்து திருப்பூர் நல்ல ஊர் நான் நிச்சயமாக வருகிறேன் என்று கூறுவார்கள்.
ஒரு முறை சுவாமி கூறினார் நிச்சயமாக நான் வந்து மந்திரை திறந்து வைப்பேன்
அதுவரை நீங்கள் பஜன் மற்றும் சேவை நிகழ்ச்சிகள் செய்யாமல் இருக்கக்கூடாது
பாபா சொன்னபடியே பிரசாந்தி கொடியை ஏற்றி வைத்து அனைத்து நிகழ்ச்சிகளும் நம் மந்திரத்தில் ஆரம்பமானது.
பல ஆண்டுகளாக திருப்பூர் பக்தர்கள் பகவானுக்காக ஏங்கி கொண்டு எப்பொழுது பகவான் நம் ஊரை ஆசீர்வதிக்கப் போகிறார் என்னும் பிரார்த்தனையோடு பல வருடங்களாக நம் சத்திய சாய் மந்திரத்தில் பஜன் மற்றும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தனர்.
பகவான் மீது திருப்பூர் பக்தர்கள் வைத்திருந்த அன்பாலும் பக்தியாலும் 1991 மே 4 ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. பகவான் திருப்பூர் விஜயம் செய்து பக்தர்களுக்கு பரிபூரண ஆசீர்வாதமும் அன்பும் வாரி வழங்கினார்.
பகவான் திருப்பூருக்கு வருகிறார் என்கிற செய்தியைக் கேட்டவுடன் திருப்பூர் பக்தர்கள் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினர். ஒரு கல்யாண வீடு போல அனைத்து பக்தர்களும் ஒன்றுகூடி ஏற்பாடுகள் செய்தனர்.
பகவான் திருப்பூர் விஜயம் செய்த நிகழ்ச்சியின் சில வீடியோ கிளிப்ஸ் உங்களுடன் சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்கிறோம்.
அன்புடன்
ஸ்ரீ சத்ய சாய் மந்திர், காப்பாளர்
ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம் – திருப்பூர் மாவட்ட தலைவர்