06
Dec
ஓம் ஸ்ரீ சாய்ராம்
சாயிராம் ப்ரேமையே வடிவான நமது பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபாவின் 95வது அவதார தினக் கொண்டாட்டம் நமது விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து சமிதிகளிலும் கீழ்க்கண்ட பிரிவுகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சேவைப்பிரிவு
அமிர்தகலசம் ( சமிதி வாரியாக )
ராஜபாளையம் – 97
ஶ்ரீவில்லிபுத்தூர் – 150
மொத்தம் – 247
வஸ்திர தானம் – போர்வை & உடைகள் ( சமிதி வாரியாக )
ராஜபாளையம் – 130
சிவகாசி -130
ஶ்ரீவில்லிபுத்தூர் – 108
மொத்தம் – 368
ஆன்மீகப்பிரிவு
சஹஸ்ர நாம அர்ச்சனை – ( சமிதி வாரியாக )
ராஜபாளையம் – 45 நபர்கள்
தபோவன பாராயணம் – ( சமிதி வாரியாக )
சிவகாசி – 25
ஶ்ரீவில்லிபுத்தூர் – 5
விருதுநகர் – 12
மொத்தம் – 42 நபர்கள்.
பஜன் ( சமிதி வாரியாக ) :
ராஜபாளையம் -67 சாயி அன்பர்கள் 7 நாட்களில் (தினமும்) 1686 பஜன் பாடல்களை பாடி பஜனை செய்தனர்.
சிவகாசி –
95 நாட்கள் தொடர்ச்சியாக House Bhajan நடைபெற்றது.
காயத்ரி ஜபம் – ( சமிதி வாரியாக )
ராஜபாளையம் – 92 சாயி அன்பர்கள் 9 நாட்களில் (தினமும்) 1,15,992 முறை சாய் காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்தனர்.
23.11.2020 அன்று விருதுநகர் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் (zoom) நடைபெற்ற சிறப்பு சத்சங்க நிகழ்ச்சியில் சுமார் 150 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர்.
கல்விப்பிரிவு
நமது பகவானின் 95வது அவதார தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிவகாசி சமிதி சார்பாக பள்ளி மாணவச் செல்வங்களுக்கான அறிவுத்திறன் அங்கீகாரப் போட்டி ( TALENT RECOGNITION COMPETITION) கீழ்க்கண்ட தலைப்புகளில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் மாணவ, மாணவியர் இடையே நடைபெற்றது.
1) ஓவியப்போட்டி ( தலைப்பு – மத நல்லிணக்கம் )
2) பேச்சுப்போட்டி ( தலைப்பு – அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் )
3) இசையமைத்து பாடும் போட்டி ( தலைப்பு – ஶ்ரீ சத்யசாயி பாபாவின் அமுதமொழிகள் ).
மொத்தம் 13 பள்ளிகளில் இருந்து 581 மாணவ மாணவியர் கலந்து கொண்டு 731 சமர்ப்பிப்புகளைச் செய்திருந்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது, 2வது மற்றும் 3வது பரிசுகள் என மொத்தம் 43 சமர்ப்பிப்புகள் பரிசுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றிற்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிக்கென்று தனித்தனியாக நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் அந்தந்த பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்ச்சி நமது பகவானின் அருளுரைகளை அடிப்படையாகக் கொண்டு மாணவச்செல்வங்களின் அறிவுத்திறன் மேம்படும் வகையில் நமது பகவானின் ஆசிகளுடன் அமையப்பெற்றது. அதற்கான சேவைப்பணிகளில் நமது ஶ்ரீ சத்யசாயி சேவை நிறுவனங்களின் விருதுநகர் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர், பாலவிகாஸ் குருமார்கள், முன்னாள் பாலவிகாஸ் மாணவர்கள் மற்றும் சிவகாசி சமிதி உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள்.
ஜெய் சாய்ராம்
Sri Suresh R, District President, Virudhunagar
Email: [email protected]