04
Jan
ஓம் ஶ்ரீ சாய்ராம்
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற சேவை நிகழ்ச்சிகள்
ஸ்வாமியின் பரிபூரண அருளால் இராஜபாளையம் சமிதியின் சார்பில் கிருஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு தையல் மிஷினை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு யாருடைய ஆதரவில்லாமல் உள்ள ஏழை தாயை கூலி வேலை செய்து காப்பாற்றிக்கொண்டு வரும் மகளுக்கு வழங்கப்பட்டது.
இராஜபாளையம் அன்னை தெரசா முதியொர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் (24 நபர்கள்) தனித்தனியாக தினமும் தேவையான வாளி, கோப்பை வழங்கி மற்றும் ஸ்வாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவகாசி சமிதியின் சார்பில் 20.12.2020 அன்று மனநல மருத்துவ முகாம் தேவையான நோயாளிகளுக்கு மட்டும் அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு பரிசோதனை செய்து, முகாமிற்கு வராதவர்களுக்கு நேரில் சென்று மருந்து, மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி 250 நபர்களுக்கு வழங்கி அத்துடன் நோயாளிகள் அனைவருக்கும் போர்வையும் (Bedsheet) வழங்கப்பட்டது.
Jai Sairam.
Sri Suresh R, District President, Virudhunagar
Email: [email protected]