District President: Sri R Suresh
Email: [email protected]
AUM SRI SAIRAM
One day Disaster Awareness program
Sairam With the Divine Grace of Our Beloved Swami, we conducted one day Disaster Awareness program at Manonmaniam Sundaranar university college, Kanyakumari on 12.7.2023 with Kanyakumari dist. DM team. Total participants -106.
Sairam with the Divine Grace of Our Beloved Swami, we conducted one day Disaster Awareness program at Manonmaniam Sundaranar university college, Kanyakumari on 12.7.2023 with Kanyakumari dist. DM team. Total participants -106.
ஸ்ரீ சத்ய சாயி இலவச மனநல மருத்துவ முகாம்
ஓம் ஸ்ரீ சாயிராம். ஸ்ரீ சத்ய சாயி இலவச மனநல மருத்துவ முகாம்
பகவானின் பெரும் கருணையால் 254-வது இலவச மனநல மருத்துவ முகாம் சிவகாசி, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி சார்பில் 18/6/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர் (ஆண்கள் பிரிவு) சாய்ராம் திரு. கோடீஸ்வர ராவ் அவர்கள், தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர் (பெண்கள் பிரிவு) சாய்ராம் திருமதி. சசிபாலா அவர்கள், மாநில சேவை ஒருங்கிணைப்பாளர் (தமிழ்நாடு தெற்கு) சாய்ராம் திரு ராஜேந்திரன் அவர்கள் மற்றும் சாய்ராம் திரு ஆம்பூர் வெங்கடேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவ முகாமில் உள்ள மருத்துவர்கள், பயனாளிகள் மற்றும் சேவாதள தொண்டர்கள் அனைவரிடமும் கலந்துரையாடி சேவையின் மகத்துவத்தை பற்றி பேசினார்கள்.
பாலவிகாஷ் Group III முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர்கள் முகாமில் கலந்து கொண்டு அனைவரிடமும் கலந்துரையாடியதால் சேவாதள் அனைவரும் புத்துணர்வு அடைந்தனர்.
இந்த முகாமில் 235 பேர் பயனடைந்தனர்.
Aum Sri Sairam by the Divine grace of Swami, 2 sump and 7 overhead tanks of Kodaikanal Sai Shruti and Sai Kesav buildings were cleaned in three days on 7th, 8th & 9th June-23 by Rajapalayam Samithi Sai youth wing (Disaster Management team), Virudhunagar district of Tamilnadu South. Thanks to Bhagawan for giving this opportunity.
Jai Sairam.
தத்தெடுத்த கிராமம் தெற்கு வெங்காநல்லூர் துவக்கவிழா நிகழ்ச்சி
ஓம் ஶ்ரீ சாயிராம். ஸ்வாமியின் பேரருளால் 04.04.2023 பங்குனி உத்திரத்தன்று இராஜபாளையம் ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் 2வது தத்தெடுத்த கிராமமாக தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்தை சார்ந்த ESI காலனியின் துவக்கவிழா நிகழ்ச்சி சாயி பஜன் மற்றும் குத்துவிளக்கு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
ஸ்ரீ பாராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கலை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் சேவை
ஒம் ஸ்ரீ சாய்ராம். விருதுநகர் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி சார்பாக ஸ்ரீ பாராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கலை முன்னிட்டு அக்னிசட்டி திருவிழா 03/04/2023 திங்கள் அன்று தெப்பம் மேற்கு புறம் உள்ள இந்து நாடார் நளபாக அலுவலகத்தில் வைத்து காலை 8 மணி முதல் மதியம் 11 மணி வரை நீர் மோர் வழங்கும் சேவை சிறப்பாக நடைபெற்றது. அதில் 15 சேவாதளர்கள் கலந்துகொண்டனர். மொத்த பயனாளிகள் 1500.
SSSVV team completed 4 days of school visits in Virudhunagar dist. Srivilliputtur Block today to observe and support champions among teachers trained on SOPAAN. Covered 7 schools in 4 days, each school located in a remote rural setting serving a local village/community. Lots of learnings on the ground. Mixed emotions throughout the visits, some highly positive, vibrant and progressive, while some highly challenging, overwhelming . The only truth that HE alone is the doer and we are just HIS instruments and HE has a master plan for all of us brings equanimity and peace. Our gratitude to Swami for this opportunity
ஶ்ரீ இராமநவமி விழா
ஓம் ஶ்ரீ சாயிராம். ஸ்வாமியின் அருளால் விருதுநகர் மாவட்டத்தில் 30.3.2023 அன்று இராமநவமி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. சிவகாசி ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதி சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை 7 நாட்கள் தொடர்ந்து இராமகதா ரஸவாஹினி பாராயனம் நடந்தது. இதில் 18 மகிளாக்கள் கலந்துகொண்டனர். இன்று சிறப்பு சொற்பொழிவு மற்றும் சாயி பஜன் நடத்தப்பட்டது. 60 பேர் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதி சார்பில் 30.3.2023 காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை பாலகாண்டம் பாராயணம் செய்யப்பட்டது. இரவு 7 to 8 மணிவரை சிறப்பு பஜன் நடைபெற்றது. அதில் 50 பேர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ சத்ய சாய் இலவச கண் பரிசோதனை முகாம்
ஓம் ஶ்ரீ சாயிராம். சிவகாசி, ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதி சார்பில் 26.3.2023 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை ஸ்ரீ சத்ய சாய் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்வாமியின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. மொத்த பயனாளிகள்:225 நபர்கள். அறுவை சிகிச்சைக்கு சென்றவர்கள்: 49 நபர்கள். சேவையில் கலந்து கொண்டவர்கள் பாலவிகாஸ் மாணவர்கள்: 04 நபர்கள், ஆண்கள்: 17 நபர்கள், மகிளாஸ் : 18 நபர்கள் youth: gent’s:02 mahilas:03 கலந்து கொண்டனர் . ஜெய் சாய்ராம்
குடிநீர் கிணறு சுத்தம் செய்யும் சேவை
ஓம் ஸ்ரீ சாயிராம். பகவானின் பேரருளால் 22.3.2023 யுகாதியை முன்னிட்டு இராஜபாளையம் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் காலை 5.20 க்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகரசங்கீர்த்தனம் நடத்தப்பட்டது.
SAI DM TEAM மூலம் காலை 7 மணி முதல் 1 மணி வரை இராஜபாளையம், அய்யனார் கோயில் வளாகத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தில் குடிநீர் கிணறு சுத்தம் செய்யும் சேவை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இரவு 7 to 8 சாயி பஜன் மற்றும் மங்கள ஆரத்தியுடன் யுகாதி விழா நிறைவடைந்தது.
ஜெய் சாய்ராம்
நீர், மோர் வழங்கும் பணி
ஸ்ரீவில்லிபுத்தூர் , ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியின் சார்பாக பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நீர், மோர் வழங்கும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 21.03.2023, ( செவ்வாய்க்கிழமை ) வடக்கு & மேல ரத வீதி சந்திப்பு.
இலவச மனநல மருத்துவ முகாம்
ஓம் ஸ்ரீ சாயிராம் ஸ்வாமியின் பரிபூரண அருளாசியால் சிவகாசி, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் 19.3.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 251வது இலவச மனநல மருத்துவ முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 2002 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்வாமியின் ஆசியால் துவக்கப்பட்ட இந்த மருத்துவ முகாம் எந்தவொரு தொய்வும் இல்லாமல் கடந்த மாதம் Feb-23 வரை 250 முகாம்கள் நடத்த வாய்ப்பு வழங்கிய நம் பகவானுக்கு நன்றியை தெரிவித்து இந்த முகாமிற்கு பின்புலமாக இருந்து சேவை செய்த அனைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டி உற்சாகப்படுத்த நம் மாநிலத் தலைவர் சாய்ராம் திரு K.R.சுரேஷ் அவர்கள் வருகை புரிந்தார்கள். காலை 5.20க்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம் அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவர் சாய்ராம் திரு T.A.மச்சவேல் அவர்களால் சர்வதர்ம கொடியேற்றப்பட்டு வேதப்பாராயணம் மற்றும் சாயி பஜனுடன் திருமதி S.ஆஷா ஶ்ரீராம் அசோக் அவர்களால் திருவிளக்கு ஏற்றப்பட்டு விழா சிறப்பாக துவங்கியது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டத்தலைவர் வரவேற்ற பின் மாநிலத்தலைவர் அவர்கள் தலைமையுரை ஆற்றி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட Dr.C.ராமசுப்பிரமணியன்(மனநல மருத்துவர்), திரு S. ஸ்ரீராம் அசோக், Dr.J.சங்குமணி, (Deen, Govt.Medical college) திரு G.அசோகன் M.L.A.(Sivakasi), திருமதி S.சுந்தரவல்லி சுரேஷ் மற்றும் DRO அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் நம் ஸ்வாமியின் கருணையையும், நம் நிறுவனத்தின் சேவை பணிகளையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். சிவகாசி சமிதி கன்வினர் அனைவரையும் நன்றி தெரிவித்து மங்கள ஆரத்தியுடன் விழா இனிதே நிறைவடைந்தது. நம் மாநிலத் தலைவர் அவர்கள் மாவட்ட, சமிதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நிறுவனத்தின் செயல் திட்டங்களை எடுத்துரைத்தார்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்கள்.
இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 246 நபர்கள் பயன்அடைந்தனர்.
450 நபர்களுக்கு நாராயணசேவை வழங்கப்பட்டது.
மாவட்ட அளவிலான இயற்கை பேரிடர் மேலாண்மை தீவிர பயிற்சி முகாம்
ஓம் ஸ்ரீ சாயிராம். ஸ்வாமியின் பரிபூரண அருளாசியால் இராஜபாளையம் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்கள் இராஜபாளையம், அய்யனார் கோயில் வளாகத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தில் வைத்து மாவட்ட அளவிலான இயற்கை பேரிடர் மேலாண்மை தீவிர பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமை டாக்டர் A.கோவிந்தராஜ் அவர்களால் குத்துவிளக்கு மற்றும் சர்வதர்மக் கொடியேற்றி சாயி பஜனையோடு துவக்கப்பட்டது. இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் D.வெங்கடேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் 45 இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று பயிற்சி எடுத்துக் கொண்டனர். பயிற்சியின் ஒரு பகுதியாக ஜோதி தியானம், தலைமை பண்பு பயிற்சி மற்றும் நகரசங்கீர்த்தனம் நடத்தப்பட்டது.
பகவானின் 98- வது பிறந்த தினத்திற்கான நாராயணசேவை
சாய்ராம். பகவானின் பரிபூரண பேரருளால் கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்ட மகிளா யுவதிகளாள் , நமது அன்பு பகவானின் 98- வது பிறந்த தினத்திற்கான அர்ப்பணிப்பாக 98 நாராயணர்களுக்கு நாராயணசேவை என்ற திட்டத்தின்படி நமது மகிளா யுவதிகளாள் தனிப்பட்ட முறையில் உணவு பொட்டலங்கள் தயாரித்து வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 132 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இராஜபாளயம் சமிதி- 109
விருதுநகர் சமிதி- 23
ஓம் ஸ்ரீ சாய்ராம் சுவாமியின் பரிபூரண பேரருளால் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நம் சமிதி தத்தெடுத்த வேப்பங்குளம் கிராமத்தில் வைத்து ஸ்ரீ சத்ய சாயி வித்யா ஜோதி மற்றும் ஸ்ரீ சத்ய சாயி கிராம அபிவிருத்தி திட்டத்தின் படி அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு புதிய RO Water Plant துவக்கப்பட்டு சாயி பஜன், மரக்கன்றுகளை நடுதல், அமிருதகலசம், பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் stationery kit மற்றும் ஸ்வாமி பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் School Balvikas வகுப்பு இன்று துவக்கப்பட்டது. சமிதி உறுப்பினர்கள் 16 பேர் கலந்துகொண்டனர்.
பாலவிகாஸ் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டி
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஆசியுடன் விருதுநகர் மாவட்டத்தில் பாலவிகாஸ் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான திறனாய்வு சிறப்பாக 27/11/22 அன்று இராஜபாளையம் சமிதியில் நடைபெற்றது. அனைத்து சமிதியைப் சார்ந்த 48 குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் முதலிடம் பெற்ற 17 குழந்தைகள் மாநில அளவில் வேலூரில் நடைபெறும் மாநில அளவிலானதிறனாய்விற்கு 25/12/22 அன்று பங்கு பெற உள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளும் பகவானின் பரிபூரண ஆசிகளை பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.
ஜெய் சாய்ராம்
பகவானின் 97ஆவது ஜயந்தி மஹோத்ஸவம்
ஓம் ஶ்ரீ சாயிராம். ஸ்வாமியின் 97வது அவதார தின மஹோத்ஸவத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சமிதி சார்பில் 17.11.2022 அன்று 108 முறை நமஸ்மரனை, 108 முறை சாயி காயத்ரி மந்திரம் மற்றும் பஜன் நடைபெற்றது.
18.11.2022 அன்று ஶ்ரீ சத்ய சாயி ஸகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சாயி பஜன் நடைபெற்றது.
18 & 19.11.2022 இரண்டு நாட்களில் 9 கிராமங்களில் ஆதரவற்ற 42 நபர்களுக்கு அமிருத கலசம் மற்றும் வஸ்திரம் வழங்கப்பட்டது.
19.11.2022 மகிளா தினத்தை முன்னிட்டு காலை 11.30க்கு அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று 60 பிறந்த குழந்தைகளுக்கு வஸ்திரம், ஸ்வாமி பிரசாதம் மற்றும் தாயிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு மகிளாக்களால் ‘பகவானை அடையும் எளிய வழி – பக்தி மார்க்கமா அல்லது சேவை மார்கமா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு அந்தாஷரி மகிளாக்களால் நடத்தப்பட்டது.
இரவு 11 மணிக்கு மேல் ரோட்டோரத்தில் உறங்கும் ஆதரவற்ற 52 நபர்களுக்கு Bedsheet போர்த்தப்பட்டது.
20.11.2022 ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்தனம், மாத்ரு பூஜை மற்றும் ஶ்ரீ சத்ய சாயி கதாம்ருதம் – வில்லுப்பாட்டு மகிளாக்களால் நடத்தப்பட்டு நாராயண சேவை வழங்கப்பட்டது.
21.11.2022 அன்னை தெரசா முதியோர் இல்லம் சென்று அவர்களின் வேண்டுதலுக்கினங்க குளிர்சாதனப்பெட்டி, வாட்டர் ஹீட்டர், நாராயண சேவை மற்றும் பஜன் நடைபெற்றது.
22.11.2022
சமிதியில் வைத்து தபோவனப் பாராயனம் மகிளாக்களால் நடத்தப்பட்டது.
23.11.2022
காலை 5.20க்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்தனம் மற்றும் ரதோத்சவம் நடைபெற்றது. 54 பேர் கலந்துகொண்டனர்.
8.30 மணிக்கு தத்தெடுத்த வேப்பங்குளம் கிராமத்திற்கு சென்று பஜன் நடத்தப்பட்டு அங்குள்ள 150 பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சர்கரைப்பொங்கள், ஸ்வாமி படம் மற்றும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு நோட்டு பேனாவும் வழங்கப்பட்டது.
கிராமத்தில் மரக்கன்று நடுதல், வஸ்திர தானம் மற்றும் அம்ருதகலசம் வழங்கப்பட்டது.
9.30 மணிக்கு சமிதியில் வைத்து மகிளாக்களால் ஸகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகிளாதினத்தன்று நடத்தப்பட்ட பட்டிமன்றம் மீண்டும் நடத்தப்பட்டது. அதில் 80 பேர் கலந்துகொண்டனர்.
12 மணிக்கு நாராயணசேவை நடைபெற்றது. 600 நபர்கள் பயனடைந்தனர்.
அதுசமயம் ESI காலனிக்கு சென்று மகிளாக்களால் 30 நபர்களுக்கு வஸ்திர தானம் மற்றும் நாராயணசேவை வழங்ஙப்பட்டது.
மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை வேதப்பாராயணம், வீடியோ படக்காட்சி, திருநெல்வேலி பேராசிரியர் திரு நாராயணன் அவர்களால் சிறப்பு சொற்பொழிவு, பஜன், ஜுலா, பாலவிகாஷ் குழந்தைகளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் மங்கள ஹாரத்தியுடன் அவதார தினவிழா வைபவம் இனிதே முடிவடைந்தது. சுமார் 100 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர்.
பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் அவதார தின விழாவையொட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதி சார்பாக சிவகாசி மாநகராட்சி அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் (SIVAKASI LEVEL TALENT RECOGNITION AWARDS 2022)
செப்டம்பர் 4,11ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
மொத்தம் 22 பள்ளிகளில் இருந்து 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாலவிகாஸ் அல்லாத மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நம் சுவாமியின் தெய்வீக செய்திகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும், அதன் மூலம் பள்ளி பாலவிகாஸ் மையங்கள் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த போட்டிகள் இரண்டு வருடங்கள் ஆன்லைனிலும், இந்த வருடம் நேரடியாகவும் நடத்தப்பட்டது.
இபபோட்டிகளுக்கான பரிசளிப்பு விழா (பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்தநாள் மற்றும் சமிதி ஆண்டு விழா நவம்பர் 13 அன்று) சிவகாசி சமிதி வளாகத்தில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
ஜெய் சாய்ராம்
ஸ்ரீ சத்யசாய்பாபா அவர்களின் 97 வது பிறந்தநாள் விழா மற்றும் சிவகாசி சமிதியின் 47 வது ஆண்டு விழாவும் ஸ்வாமியின் அருளால் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் 60 பாலவிகாஸ் மாணவ மாணவிகள், 50 பள்ளி மாணவ மாணவிகள், 13 குருமார்கள், 80 பெற்றோர்களும் மற்றும் 30 சமிதி அங்கத்தினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
பாலவிகாஸ் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மற்றும் திரு. தங்கமணி சாய்ராம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மங்கள ஆரத்தியுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. ஜெய்சாய்ராம்
நம் பகவானின் ஆசியுடன் சிவகாசி சமிதி சார்பில் 97 வது அவதார தினத்தை முன்னிட்டு 19-11-2022 அன்று மாலை 6மணக்கு 108 திருவிளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜை நிறைவில் மாவட்ட தலைவர் சாய்ராம் திரு சுரேஷ் அவர்கள் மிக அருமையான சொற்பொழிவு வழங்கினார். ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம் . பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு 20/11/2022 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4.00 மணிக்கு இலாட்சார்சனை (ஓம் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்னாய நமஹ:) விருதுநகர் சமிதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரு சுரேஷ் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
இதில் 80 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நாராயணசேவை வழங்கப்பட்டது.
ஓம் ஸ்ரீ சாய்ராம் . பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு 23/11/2022 காலை 5.05 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம் மற்றும் சர்வதர்ம கொடியேற்றப்பட்டது. மதியம் 11 – 12 மணிக்கு
சிறப்பு பஜன் மற்றும் நாராயண சேவை 105 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 – 7 மணிக்கு சிறப்பு பஜன், மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி விருதுநகர்
ஜெய் சாய்ராம்
ஓம் ஶ்ரீ சாயிராம். இராஜபாளையம் அய்யனார் கோவில் வளாகத்தில் உள்ள சிவானந்தா ஆஸ்ரமத்தில் வைத்து கார்திகை தீப திருநாளை முன்னிட்டு இளைஞர்கள் பிரிவு சார்பில் cleaning camp 26.11.2022 அன்று நடத்தப்பட்டது.
Seva Sadhana Camp
With the Divine Blessings of our Beloved Bhagawan, Rajapalayam Sri Sathya Sai Seva Samithi conducted Seva Sadhana camp on the occasion of the Puratasi tamil month, the Temple cleaning seva on 18.9.2022 Sunday at Rajapalayam Vettai Perumal Kovil was done well. Total participants -29 (Gents-13, Mahilas-10, Balvikas students-6)
பிரசாந்தி சேவா சாதனா முகாம்
சாய்ராம் பகவானின் ஆசீர்வாதங்களுடன் பிரசாந்தி சேவா சாதனா முகாம் நேற்று 21.08.2022 விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. 65 (ஆண்கள் மற்றும் மகளிர்) சேவாதளத் தொண்டர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மங்கள ஆரத்தியுடன் சாதனா முகாம் இனிதே நிறைவடைந்தது.
இலவச மனநல மருத்துவ முகாம்
ஓம் ஶ்ரீ சாயிராம். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் 244 வது இலவச மனநல மருத்துவ முகாம் 21.8.2022 அன்று ஸ்வாமியின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை நம் மாநில இணை சேவை ஒருங்கிணைப்பாளர் சாய்ராம் திரு.ராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வாழ்துரை வழங்கினர். இதில் 229 பேர் பயன் அடைந்தனர்.
Varalakshmi Pooja
Sairam , with the Divine Blessings of our Beloved Bhagawan, Virudhunagar dist. 3 samithies (Rajapalayam, Sivakasi & Virudhunagar) conducted VARALAKSHMI POOJA on 05.08.2022 Friday. 160 mahilas participated. Sairam
ஆண்டாள் கோயில் ஐந்து கெருட சேவை ரதோத்ஸவத்தில் நகரசங்கீர்தனம்
ஓம் ஶ்ரீ சாயிராம். ஸ்வாமியின் பேரருளால் ஸ்ரீவில்லிபுத்தூர் சமிதியின் சார்பில் 28.7.2022 வியாழன் இரவு 10.30 முதல் 01.15 மணி வரை ஆண்டாள் கோயில் ஐந்து கெருட சேவை ரதோத்ஸவத்தில் கலந்து கொண்டு மாட வீதிகளில் (நகரசங்கீர்தனம்) ஶ்ரீ சத்ய சாயி பஜன் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஶ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் மற்றும் சிவகாசி சமிதி உறுப்பினர்கள் – 30 பேர்(ஆண்கள்-17, மகிளாக்கள்-13) கலந்து கொண்டனர்.
பகவானின் 96வது அவதார தின விழா நிகழ்ச்சிகள் – விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் சமிதி :
சுவாமியின் பெரும் கருணையினால் 17.8.2021லிருந்து தொடர்ச்சியாக 96 நாட்கள் சாயி அன்பர்கள் வீட்டில் ஹவுஸ் பஜன் நடைபெற்றது.
18.11.21 – சாயி அமிர்த கலசம் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு எடுத்துச் சென்று( நவம்பர் 23ஆம் தேதி வரை) இந்த சேவை தொடர்ந்து தினமும் நடைபெற்றது
இராஜபாளையத்தை சுற்றியுள்ள 15 கிராமங்களுக்கு எடுத்துச் சென்று வழங்கப்பட்டது.
பயன் அடைந்த குடும்பங்கள் : 111
பின்னர் அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.
19.11.21 – அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று பிறந்த குழந்தைகளுக்கு (65 பேர்) தேவையான துணிமணிகள் மற்றும் பிரசாதம் கொடுக்கப்பட்டன .
பவுர்ணமியை முன்னிட்டு ஶ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜை சமிதியில் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள் – 18 பேர்
20.11.21 – இரவு 7 மணிக்கு சமிதியில் வைத்து Special Divine Songs பாடல்கள் பாடப்பட்டன.
இரவு 10.30 மணிக்கு மேல் சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வை போர்த்தி விடப்பட்டன .
பயனடைந்தோர் – 54 பேர்.
21.11.21 – பாலவிகாஸ் மாணவர்களின் சிறப்பு பஜன் சமிதியில் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெற்றது.
பின்னர் வஸ்திரதானம் 62 பேருக்கும் போர்வைகள் 43 பேருக்கும் வழங்கப்பட்டன.
22.11.21 – சமிதியை துப்பரவு செய்தல் மேலும் சமிதியில் அலங்காரம் செய்தல்.
ஸ்கூல் பாலவிகாஸ்165 மாணவர்களுக்கு பென்சில், ரப்பர், ஸ்கேல் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.
23.11.21 – 5:20 ஓம்காரம் சுப்ரபாதம் நகர சங்கீர்த்தனம்
6.10 – பிரசாந்தி கொடியேற்றுதல்
6.45 – ருத்ர பாராயணம்.
9.30 – தத்தெடுத்த கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள 150 மாணவர்களுக்கு பென்சில், ரப்பர், ஸ்கேல் அடங்கிய பொருட்களையும், சர்க்கரைப் பொங்கல் மேலும் சுவாமி படமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
10.00 – சமிதியில் வைத்து சகஸ்ரநாம அர்ச்சனை
12.00 மணிக்கு நாராயண சேவை 500 பேருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் உடல் ஊனமுற்ற ஒரு நபருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
மாலை நிகழ்ச்சியாக 5.30 லிருந்து சாயி பஜன், சத்சங்கம், ஜூலா பாடல் , சுவாமியின் வீடியோ படக்காட்சிகளும் நடைபெற்றன.
சரியாக 8 மணிக்கு மஹா மங்கள ஆரத்தியுடன் விழா இனிதே நிறைவுற்றது. பின்னர் லட்டு பிரசாதம் 250 பேருக்கு வினியோகிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சமிதி
20.11.21 – திருவிளக்கு பூஜை
கலந்து கொண்டவர்கள் – 15 பேர்
21.11.21 – சகஸ்ரநாம அர்ச்சனை கலந்துகொண்டவர்கள் ஆறுபேர்
22.11.21 – மாத்ரு பூஜா – கலந்து கொண்டவர்கள் 20 பேர்
23.11.21 –
5.20 ஓம்காரம் சுப்ரபாதம் நகர சங்கீர்த்தனம்
தொடர்ந்து தபோவனம் பாராயணம் செய்யப்பட்டது 14 பேர் கலந்து கொண்டனர்.
90 பேருக்கு நாராயண சேவை வழங்கப்பட்டது.
பின்னர் சாயி பஜன் நடைபெற்றது 25 பேர் கலந்து கொண்டனர் சரியாக 8 மணிக்கு மகா மங்கள ஆரத்தி விழா இனிதே நிறைவுற்றது .
சிவகாசி சமிதி
20.11.21 – லட்டு பிரசாதம் செய்யக்கூடிய சேவைகள் நடைபெற்றன. 700 லட்டுகள் செய்யப்பட்டன .
21.11.21 – மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கேம்ப் நடைபெற்றது அதில் 310 பேருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது .
23.11.21 –
5.20 – ஓம்கரம் சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் பல்லக்கு சேவையுடன் நடைபெற்றது. 63 பேர் கலந்து கொண்டனர் .
பின்னர் தபோவன பாராயணம் நடைபெற்றது 34 பேர் கலந்துகொண்டனர் தொடர்ந்து வஸ்திரதானம் 27 பேருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் நாராயண சேவையும் நடைபெற்றன .
சிறப்பு பின்னர் மாலை நிகழ்ச்சியாக பாலவிகாஸ் மாணவர்களுக்கான பஜனை நடைபெற்றது 75 மாணவர்கள் கலந்துகொண்டனர், சரியாக 8 மணிக்கு மகா மங்கள ஆரத்தியுடன் விழா இனிதே நிறைவுற்றது .
மிக முக்கியமான நிகழ்ச்சியாக சிவகாசி சமிதியின் சார்பாக 21 பள்ளியை தேர்ந்தெடுத்து போட்டிகள் மாணவர்களுக்கிடையேயான போட்டிகள் நடைபெற்றன . அதில் 18 பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சர்டிபிகேட் வழங்கப்பட்டன. இதில் பங்கு பெற்ற 600 மாணவர்களுக்கு பிரசாதம், சுவாமி படம் வழங்கப்பட்டன.
விருதுநகர் சமிதி
நாள்:- 21/11/2021
இடம்:- விருதுநகர் சமிதி
மாலை 4.30 – 6.00 ஷிரடி சாயி பாபாவிற்க்கு அபிஷேகம் செய்யப்பட்டது
மாலை 6.01 – 7.00 சிறப்பு பஜன்
மாலை 7.01 – 7.31 பாலவிகாஸ் குழந்தைகளுக்கு, முன்னர் வைத்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் மொத்தம் 106 பேர் கலந்து கொண்டனர்.
நாள்:- 23/11/2021
இடம்:- விருதுநகர் சமிதி
காலை 6.30 – 7.30 சிறப்பு பஜன்
மதியம் 12.30க்கு நாராயண சேவை வழங்கப்பட்டது, இதில் ‘115’ பேர் பயன் அடைந்தனர்
மாலை 5.30 – 6.30 “பகவானிடம் பக்தி” என்ற தலைப்பில் சாய்ராம்.லோகநாதன் பகதர்களூக்கு உறையாற்றினார்
மாலை 6.31 – 7.30 சிறப்பு பஜன் மற்றும் மங்கல ஆரத்தியுடன் நிறைவேறியது
இதில் மொத்தம் 93 பேர் கலந்து கொன்டனர்.
பகவான் ஸ்ரீ ஸத்ய சாயி பாபா அவர்களின் 96வது பிறந்தநாள்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகாசி ஸ்ரீ ஸத்ய சாயி சேவா நிறுவனத்தால் Sri Sathya Sai Talent Recognition Awards 2021 என்ற தலைப்பில் 8 விதமான தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. சிவகாசியைச் சேர்ந்த 18 பள்ளிகளில் இருந்து, வயது வாரியாக ஐந்து பிரிவுகளில் மொத்தம் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மாறுவேடப்போட்டி
- வாழ்த்து அட்டை தயாரித்தல்
- கழிவுகளிலிருந்து கலைப்பொருள்
- கவிதை இயற்றல்
- பேச்சுப்போட்டி
- ஓவியப்போட்டி
- மெட்டமைத்துப் பாடும் போட்டி
- பவர்பாயிண்ட் ப்ரெசென்ட்டேஷன் : தலைப்பு “என் சேவை“
மேற்காணும் போட்டிகளின் முடிவில், 81 அவார்டுகள் அறிவிக்கப்பட்டது. ஸ்வாமியின் பிறந்த தினமான 23 நவம்பர் 2021 அன்று, சிவகாசி சமிதி அங்கத்தினர்கள் அவார்டுகள், சான்றிதழ்கள் மற்றும் ஸ்வாமியின் பிறந்தநாள் இனிப்புகளை அந்தந்த பள்ளிகளுக்கே சென்று வழங்கினர்.
Sevedal Training Program – Phase-4
Sairam, with the Divine Blessings of our Bhagavan, Sevedal Training Program – Phase-4 on 10th October 2021 at Sri Sathya Sai Seva Samithi-Sivakasi, Virudhunagar District was inaugurated by T.A.Matchavel, Ex.DP. with an inspiring Swami’s message related to Service.
Then it started as per the schedule. The program was supported by the District office bearers and Samithi Convenors. Final conclusion note was given by the DP, Virudhunagar dist.
64 members (Gents-29, Mahilas-35) participated in this program. All the participants were happy.
Jai Sai Ram