District President: Sri Narasimhan R
Email id: sknramana1@ gmail.com
Aum Sri Sairam
பகவான் பாபா பிறந்தநாள் 98 பஜன்
பகவான் பாபாவின் அருட் கருணையினால் ஏற்கனவே திட்டமிட்டப்படி 98 பஜன் புதுச்சேரியில் 26/6/2023 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு துவங்கியது. இதில் புதுச்சேரியில் உள்ள 5 சமிதிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பால விகாஸ் குழந்தைகளுக்கு ஒதுக்கபட்ட நேரத்தில் குழந்தைகள் மிகவும் நேர்த்தியாக பாடி பகவானுக்கு பாமலை சூட்டினர். மாலை 7.20 மணிக்கு மங்கள ஹாரதியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
சாதனா முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் பாபாவின் அருட்கருனையினால் ஸ்ரீ சத்ய நிறுவனங்களின் புதுச்சேரி மாவட்டம் சார்பாக 18/6/2023 அன்று ஒரு சாதனா முகாம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 சேவாதள தொண்டர்கள் கலந்து கொண்டனர். காலை 7.00 மணிக்கு பஜனையுடன் தொடங்கிய பணி பகல் 12.00 மணியளவில் சத்சங்கம் மற்றும் மங்கள ஹரதியுடன் நிறைவடைந்தது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி உடன் இருந்து சத்ய நிறுவனத்தின் பணியை மிகவும் பாராட்டி பேசினார்.
பேரிடர் கால நண்பன் சேவா தொண்டர்களுக்கான பயிற்சி பாகம் -2 முகாம்
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஏற்பாடு செய்து இருந்த (Aaptha Mithra -batch 2) பேரிடர் கால நண்பன் சேவா தொண்டர்களுக்கான பயிற்சி பாகம் -2 முகாமில் நமது சத்ய சாய் நிறுவனங்களின் பேரிடர் நிர்வாக பயிற்சியாளர்கள் 18/03/23 to 19/03/22 ஆகிய இரு தினங்களிலும் பேரிடர் மேலாண்மை செயல்முறை பயிற்சி அளித்தனர். இதில் புதுச்சேரியில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், மற்றும் பொது மக்கள் சுமார் 70 பேருக்கு மேல் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
மாவட்ட அளவிலான மகிளா மாநாடு
சாய்ராம், பகவான் பாபாவின் ஆசிகளுடன் புதுச்சேரி இல் (12/3/2023) மாவட்ட அளவிலான மகளிர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . அனைத்து சமிதிகளில் இருந்தும் 30 க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். புட்டபர்தியில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் (conference) கலந்து கொண்ட மகளிர் தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் உத்வேகம் அளிக்க கூடிய மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட அளவில் பஜனை மற்றும் மங்கள ஹாரதியுடன் நிகழ்ச்சி முடிவுற்றது. ஜெய் சாய்ராம்.
மாசிமகம் திருவிழா
சாய்ராம்,புதுச்சேரியில் (07/3/2023) அன்று மாசிமகம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மற்றும் வெளியூர் கோவில்களில் இருந்து சுவாமிகள் கடல் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி இருந்தனர். விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு சத்ய சாய் சேவா நிறுவங்களின் புதுச்சேரி சத்ய சாய் மாவட்டம் சார்பில் மோர் பந்தல் அமைத்து மோர் விநியோகம் நடைபெற்றது. இதில் 34 சேவாதள தொண்டர்கள் கலந்து கொண்டனர் (14 ஆண்கள்,16 மகளிர், 2 இளைஞர்கள் மற்றும் 2 பால விகாஸ் குழந்தைகள் பங்கு கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முக்கியமாக குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களிடம் பால விகாஸ் சிறப்புகள் பற்றியும், வகுப்புகள் நடைபெறும் இடங்கள் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. பால விகாஸ் விபரங்கள் மற்றும் தொடர்புக்கு கை பேசி எண்கள் அடங்கிய கை ஏடுகள் (notice) வழங்கப் பட்டன. மங்கள ஹரதியுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
ஸ்ரீ சத்ய சாய் திரு விளக்கு பூஜை
சாய்ராம், பகவான் பாபாவின் அருட் கருணையினால் 10/2/23 அன்று புதுச்சேரி குறிஞ்சி நகர் சமிதியில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 29 மகளிர் கலந்து கொண்டனர். குறிஞ்சி நகர் சமிதி மகளிர் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முன்னின்று விளக்கு பூஜையை நடத்தினார். இருவர் சேவாதல் ஆக பணியாற்றினார். விக்னேஸ்வர பூஜை, சாய் அஷ்டோதரம், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, லலிதா நவரத்ன மாலையுடன் விளக்கு பூஜை செய்த 26 பேரில் 10 பேர் பாலவிகாஸ் குழந்தைகளின் தாயார்கள், 4 பேர் பொதுமக்கள் மற்றும் மீதமுள்ள 12 பேர் சமிதி உறுப்பினர்கள். மஹா மங்கள ஹரதியுடன் விளக்கு பூஜை பிரசாதம் விநியோகத்துடன் சிறப்பாக முடிவுற்றது.
ஜெய் சாய்ராம்
சாய் இளைஞர் கூட்டம்
பகவான் பாபாவின் ஆசிகளுடன் புதுச்சேரி சத்ய சாய் மாவட்டத்தில் சாய் இளைஞர் கூட்டம் 26/1/2023 அன்று நடைபெற்றது. இதில் அனைத்து சாய் சமிதிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 28 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பகவான் பாபாவின் நூற்றாண்டு விழா தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய திட்டங்கள் பற்றியும் அதை எவ்வாறு செயல் படுத்தலாம் என்று கலந்துரையாடல் நடைபெற்றது. அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குவதாக உறுதி அளித்தனர். மங்கள ஆரத்தியுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அவதார தின புகைப்பட கண்காட்சி
புதுச்சேரி சாய் மாவட்டம் சார்பில் சுவாமியின் அவதார தின புகைப்பட கண்காட்சி பாரதி நகர் பஜன் மண்டலி இல் 30/10/22 அன்று திறந்து வைக்கப்பட்டது. புதுவையின் அனைத்து சமிதிகளின் பால விகாஸ் குழந்தைகள் 40 பேர் சாய் கதா – சத்யா முதல் சாய் வரை மிகவும் அற்புதமாக எடுத்து கூறினர். தற்போது மேற்கொள்ளபடும் சேவை திட்டங்கள் பற்றியும் விளக்கினர். பகவான் பாபா பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. குழந்தைகளின் அறிவை வளர்க்கக்கூடிய விளையாட்டுகள் (value games) நிகழ்சியில் இடம் பெற்றன. பயிற்சி கொடுத்த 15 குருமார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசு பொருட்கள் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். பால விகாஸ் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஏற்பாடு செய்து இருந்த (Aaptha Mithra) பேரிடர் கால நண்பன் சேவா தொண்டர்களுக்கான பயிற்சி முகாமில் நமது சத்ய சாய் நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவர் தலைமையில் 15/10/22 to 16/10/22 ஆகிய இரு தினங்களிலும் பேரிடர் மேலாண்மை செயல்முறை பயிற்சி அளித்தனர். இதில் புதுச்சேரியில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், மீனவ சமுதாயத்தினர் மற்றும் பொது மக்கள் சுமார் 200 பேருக்கு மேல் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
Sairam, 2 days Disaster Management program for Pondy Govt nominated Aapda Mitra (Friends during Disasters). The first day program was grand success. The intro speech by the Pondy District President, then followed by the scheduled program. All the 105 participants were fully involved in the knots practice, rescue methods, lashings, hurt fire. They all eager for second day program which is about to start today (16-10-22) @ 9.00 am. Jai Sai Ram
Sairam! With Swami’s blessings, we got a unique opportunity to Puducherry exhibit on Disaster Management, during the Aapda Mitra inauguration, the exhibition was Inaugurated by the Honorable Cheif Minister of Puducherry along with MLAs, District Collector, Deputy Collectors N&S, and other officers
7 departments like Fire & Rescue, Port, Wireless, Airport Authority, Health, etc. were also part of this exhibition.
In this we Sri Sathya Sai Seva Organisation, Disaster Management Team, Puducherry exhibit techniques like improvised floating, proto-types on Knots, Rope Bridge, Tripod, Arial ropes, etc.
Dignitaries were very much impressed with our exhibit and District Collecter personally confirm that he will be there for 2 days of training going to be held on 15th & 16th Oct.
Jai Sairam
சாய்ராம் புதுச்சேரி பனையடி குப்பம் கிராமத்தில் ஒரு பஜனா மண்டலி இன்று 09/10/22 திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு ஓம்காரம் மற்றும் வேத பாரயணத்துடன் தொடங்கியது. பால விகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து சாய் பஜன் நடை பெற்றது. சத்ய சாய் நிறுவனங்களின் பணிகள் பற்றியும் பால விகாஸ் வகுப்புகள் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. பால விகாஸ் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம பொது மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மங்கள ஹாரதியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. ஜெய் சாய்ராம்
பால விகாஸ் குருமார்களுக்கு பயிற்சி வகுப்புகள்
பகவான் பாபாவின் அருட் கருணையினால் புதுச்சேரியில் 01/10/2022 அன்று குரூப் -1 மற்றும் குரூப் – 2 பால விகாஸ் குருமார்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் 8 ஆண்களும், 16 பெண்களும் பங்கு கொண்டனர். 4 மூத்த குருமார்கள் குழந்தைகளுக்கு பால விகாஸ் வகுப்புகள் எடுப்பது பற்றி பயிற்சி அளித்தனர். 6 சேவா தள தொண்டர்கள் எல்லா உதவிகளையும் செய்தனர். மங்கள ஹரதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
Swachata se Divyata Tak Activity
With the blessings of Swami and direction given by our AIP, on the occasion of Gandhi Jayanthi Swachata se divyata tak Bharath movement and also as per our State Office instructions Mega cleaning project was carried over on behalf of Puduchery district sai devotees in which around 60 sevadals participated at Navalar Neduncheyan School.
The service started with Aumkaram & Bhajan followed by cleaning activities along with breakfast and ended with the speech given by DP regarding the purpose of today’s seva and concluded with Mangala Aarthi.
Sevadals – 8
Office bearers- 7
Youths – 31
College students – 4
Mahilas- 4
Balvikas students – 5
நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை
சாய்ராம், புதுச்சேரி மங்கலம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் 28/9/2022 அன்று நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை சத்ய சாய் நிறுவனங்களின் மகிளா அணி சார்பாக செய்யப் பட்டது. இதில் பால விகாஸ் குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட 75 உள்ளூர் மகளிர் கலந்து கொண்டு மிகுந்த பக்தி சிரத்தையுடன் பூஜை செய்தனர். கிராம பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு பகவான் அருள் பெற்றனர். சத்ய சாய் நிறுவனங்களின் சேவைகள் பற்றியும் பால விகாஸ் வகுப்புகள் பற்றியும் எடுத்து உரைக்கபட்டது.
ஜெய் சாய்ராம்
பஜனா மண்டலி திறந்து வைக்கப்பட்டது
சாய்ராம், பகவான் பாபாவின் நல் ஆசியுடன் இன்று 29/9/2022 புதுச்சேரி-8 பாரதி நகரில் ஒரு பஜனா மண்டலி திறந்து வைக்கப்பட்டது. சமிதி உறுப்பினர்கள் மறறும் பொதுமக்கள் 40 பேர் விழாவில் கலந்துகொண்டு பகவான் அருள் பெற்றனர்.
ஜெய் சாய்ராம்
ஓணம் பண்டிகை
சாய்ராம், புதுச்சேரி சத்ய சாய் நிறுவனங்கள் சார்பாக ஓணம் பண்டிகை 04/9/2022 அன்று கொண்டாடப்பட்டது. பால விகாஸ் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பூ கோலப்போட்டி நடத்த பட்டது. 18 பேர் இதில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் பற்றி எடுத்து உரைக்கப்பட்டது. பால விகாஸ் வகுப்பு களின் பயன்களை பற்றியும் அதிக குழந்தைகளை பால விகாஸ் வகுப்பு களுக்கு அழைத்து வர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பால விகாஸ் குழந்தைகளின் பெற்றோர்கள் குருமார்களாக சேவை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. பொது மக்கள் உட்பட சுமார் 75 பேர் கலந்தகொண்டனர்.
ஜெய் சாய்ராம்
ஆசிரியர் தின விழா கொண்டாடம்
சாய்ராம், பகவான் பாபாவின் அருட்கருனையினால் நேற்றைய தினம் (04/9/22) சத்ய சாய் நிறுவனங்களின் சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அவ்வமயம் 30 ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் பெருமை படுத்த பட்டனர்
நிகழ்ச்சியில் பால விகாஸ் வகுப்புகள் பற்றி பேசி ஆசிரியர்கள் பால விகாஸ் வகுப்புகளில் கலந்துகொண்டு அங்கு பயிலும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார். 30 ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா
சாய்ராம், பகவான் பாபாவின் அருட்கருணையினால் நேற்று (21/8/2022) புதுச்சேரி சத்ய சாய் சேவா சமிதி சார்பில் மாவட்ட அளவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட பட்டது. பால விகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், உறியடி திருவிழா, பஜன், மங்கள ஹாரத்தியுடன் விழா இனிதே நிறைவடைந்தது. பாலவிகாஸ் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் சுமார் 150 பேருக்கு மேல் கலந்து கொண்டு பகவான் அருள் பெற்றனர்.
சாய்ராம், 19/8/2022 அன்று கோகுலாஷ்டமி ஐ முன்னிட்டு புதுச்சேரி சத்ய சாய் நிறுவனம் தத்து எடுத்த பணயடி குப்பம் கிராம பால விகாஸ் குழந்தைகள் தங்களது கிராமத்தில் இருந்த பசுக்களுக்கு பூஜை செய்து உணவு பொருட்கள் வழங்கி அவர்களது அன்பை வெளிப்படுத்தினர்.
சாய்ராம், 19/8/2022 அன்று புதுச்சேரி மாவட்ட சத்ய சாய் மாவட்ட கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குருகுல வேத ஆஸ்ரமத்தில் கோ சாலையில் கிருஷ்ண பஜன் நடைபெற்றது. பின்னர் கோ சம்ரக்ஷனை செய்ய பட்டது. இதில் பால விகாஸ் குழந்தைகள், மற்றும் பெற்றோர்கள் 25 பேருக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
Vilakku Pooja – Aadi Masam
சாய்ராம், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஐ முன்னிட்டு 29/7/2022 அன்று புதுச்சேரி காந்தி ரோடில் உள்ள வேத புரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடை பெற்றது. சத்ய சாய் சமிதி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் 46 பேர் விளக்கு பூஜை செய்தனர். பஜனை பாடல்கள் மற்றும் மங்கள ஹாரதியுடன் விழா இனிதே நிறைவடைந்தது. 100 பேருக்கு மேல் விழாவில் கலந்துகொண்டு பகவான் அருள் பெற்றனர்.
Inauguration of two Bhajana Mandalies
Sairam with our bhagawan blessings our Metro President inaugurated two Bhajana Mandalies in Pondicherry one in Thirubhuvanai and another one in Vampupattu
Date – 29 July 2022