District President: Saravanan S
Email: [email protected]
Aum Sri Sairam
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பகவான் ஆசியுடன் 29/06/2023 நமது விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சமிதியில் மாவட்ட யுவதிகள் சாதனா முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நமது மாநில துணை தலைவர் திரு.விஜய் கிருஷ்ணன் அவர்கள் , மாநில மகிலா யுவதிகள் ஒருங்கிணைப்பாளர் திருமதி.சாய் தேவி மற்றும் மாநில இயற்கை பேரிடர் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.ரூபேஷ் குமார் அவர்களும் கலந்து கொண்டு சாதனா முகாமை நடத்திக் கொடுத்தனர்.
இந்த முகாம் காலை 08:00 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு மாவட்ட தலைவரின் வரவேற்புரையும் மாவட்ட யுவதிகள் ஒருங்கிணைப்பாளர் திருமதி.விஜயா சாய்ராம் அவர்களின் அறிமுக உரையும் உளுந்தூர்பேட்டை சமிதி திருமதி.பைரவி சாய்ராம் அவர்கள் & விழுப்புரம் சமிதி செல்வி.அர்ச்சனா அவர்களும் பகவானுடன் நாம் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதனை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்திலிருந்து 37 யுவதிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் நமது மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாநில யுவதிகள் ஒருங்கிணைப்பாளரும் பகவானைப் பற்றியும்,நமது நிறுவனத்தைப் பற்றியும் ,நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளை பற்றியும் எடுத்துரைத்து கலந்துரையாடல் நடத்தினர். நமது பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் அவர்களால் பேரிடர் மேலாண்மை பற்றி அறிமுக உரை நடத்தப்பட்டது. நிறைவாக மாவட்ட தலைவரின் கலந்துரையாடலும் அதைத் தொடர்ந்து பகவானுக்கு மகா மங்கள ஆரத்தியும் அனைவருக்கும் பிரசாதம்.
ஓம் ஸ்ரீ சாய்ராம் நேற்று 27.5.2023 அன்று கள்ளக்குறிச்சி ஏமப்பேர் வரதப்பனூர் தியாகதுருகம் ஆகிய சமிதி மற்றும் பஜன மண்டலியில் இருந்து புட்டபர்த்தி மே மாத சேவைக்கு வந்தவர்களை சந்திக்கும் விதமாக விழுப்புரம் மாவட்ட தலைவர் மற்றும் சேவை ஒருங்கிணைப்பாளர் கன்வினர்கள் கலந்து கொண்டு அனைவரையும் சிறப்பித்தார்கள்.
இதில் முத்தாய்ப்பாக மாவட்ட தலைவர் உரை இருந்தது இதில் வருங்காலங்களில் முன்னெடுக்க வேண்டிய பணிகளை பற்றி மிகவும் சிறப்பான முறையில் எடுத்துக் கூறினார். அதில் சேவையைப் பற்றி நாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை பற்றியும் மிகவும் சிறந்த முறையில் வழிகாட்டி சேவைக்கு அதிகப்படியானவர்களை எப்படி ஈடுபடுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
பிறகு சனாதன சாரதியை ஆயுள் சந்தா சேர்ப்பதை பற்றியும் எடுத்துக் கூறினார் குடும்ப நாராயண சேவை செய்வது பற்றியும் வருங்காலம் மழைக்காலம் என்பதால் மரக்கன்று நடுவதை பற்றியும் பழைய பக்தர்களை வீடு தேடி சந்திக்கும் நிகழ்ச்சியை பற்றியும் அவர்களை மீண்டும் அழைக்க வேண்டும் என்பதையும் மிகவும் தெளிவாகவும் உருக்கமாகவும் எல்லோரும் புரியும் படியும் எடுத்துக் கூறினார்
சாய்ராம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சமிதியில் 25 5 23 அன்று மாலை புட்டபர்த்தி மே சேவையில் பங்கு பெற்ற சேவாதள தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடைபெற்றது இதில் இரண்டு சேவை பிரிவிலும் பங்குபெற்ற ஆண்கள் பெண்கள் இருபாலரையும் சந்தித்து அவர்களிடம் சேவையின் நோக்கத்தையும் சேவை செய்வதன் பலனையும் கலந்துரையாடி அவர்களுக்கு சுவாமியின் படம் விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது இதில் விழுப்புரம் மாவட்ட தலைவரும் சேவை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் சமிதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ஜெய் சாய்ராம்
சாய்ராம் புட்டபர்த்தியில் நடைபெற்ற மே மாத சேவைக்காக வந்திருந்த விழுப்புரம் மாவட்டம் கொந்தாமூர் சமிதியை சார்ந்த பஜன மண்டலி மழவந்தாங்கல் கிராமத்தில் இருந்து வந்திருந்த சேவா தள தொண்டர்கள் இரண்டு சேவை பிரிவுகளிலும் சேவை செய்து நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்திருக்கிறார்கள் அவர்களை சந்திக்கும் விதமாக நேற்று 19 5 23 அன்று சந்தித்து அவர்களுடன் சேவையைப் பற்றிய கலந்துரையாடல் நடத்தி அடுத்த சேவை பிரிவிலும் இதே போல ஒத்துழைப்பு தந்து மற்றவர்களையும் உங்களுடன் அழைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளோம் அவர்களும் அழைத்து வருகிறோம் என்று உறுதியளித்துள்ளார்கள் அதன் பிண் மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் மாவட்டத் தலைவர் மற்றும் சமிதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் வந்திருந்த சேவாதள தொண்டர்களுக்கு சுவாமி படம் விபூதி பிரசாதம் இனிப்புகளும் வழங்கப்பட்டது ஜெய் சாய்ராம்
சாய்ராம். விழுப்புரம் மாவட்ட தலைவர் முன்னெடுப்பின் காரணமாக போன மாதம் ஒவ்வொரு சமிதி பொறுப்பாளர்களையும் சந்தித்து அவர்களிடம் சமிதிக்கு வர இயலாத வராமல் இருக்கின்ற பக்தர்களை நேரில் சந்தித்து அவர்களை வரும்படி சுவாமி சேவையில் ஈடுபடுபடியும் கலந்துரையாடி ஒவ்வொரு பக்தர்கள் இல்லத்திற்கும் தானே நேரில் சென்று இதை வலியுறுத்து வந்த நிலையில் இப்பொழுது முதல் கட்டமாக உளுந்தூர்பேட்டை சமிதி முன்னெடுத்துள்ளது இதன் முன்னெடுப்பாக பழைய பக்தர்கள் ஒன்பது பேர் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சுவாமியை பற்றியும் மீண்டும் சமிதிக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும் என்றும் கூறி அவர்களுக்கு சுவாமி படம் மற்றும் பிரசாதம் கொடுக்கப்பட்டது ஜெய் சாய்ராம்
பிரசாந்தி சேவை சேவா சாதனா முகாம்
பகவான் ஆசியுடன் 16/04/2023 அன்று நமது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்
கொந்தாமூர் & திண்டிவனம் சமிதிகள் இணைந்து மே மாதம் பிரசாந்தி சேவைக்கு செல்பவர்களுக்கு சேவா சாதனா முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் சிறப்பு.
இதுவரை கொந்தாமூர் சமிதி சார்பாக 30 & 35 மகிலா 1 & 2 Batches தொடர்ந்து 15 நாட்கள் சேவை செய்வதற்கு பதிவு செய்துள்ளனர்
இந்த முகாமில் திண்டிவனம் சமிதி கன்வினர் திரு.முருகன் அவர்கள் வரவேற்புரையும் மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் முன்னுரையும், கொந்தாமூர் சமிதி கன்வினர்.
திரு.புருஷோத்தமன் அவர்கள், & மாவட்ட & சமிதி பொறுப்பாளர்களும் சேவையின் சிறப்பை பற்றிய உரை நிகழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் அவர்கள் சாதனா முகாமின் வழிகாட்டுதல் உரைநிகழ்த்தினார்.
நிறைவாக பகவானுக்கு மகாமங்கள ஆரத்தியும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சுமார் 80 அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் சமிதி சார்பாக அனைவருக்கும் பகவான் ஆசியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மே மாத பிரசாந்தி சேவைக்கு சாதனா முகாம்
பகவானின் ஆசியுடன். 08/04/2023 அன்று நமது விழுப்புரம் மாவட்டம் ஏமப்பேர் சமிதியை சேர்ந்த வரதப்பனூர் பஜனா மண்டலி,கனங்கூர், & பெரசகுறிச்சி கிராமங்களில் தனித்தனியே மே மாத பிரசாந்தி சேவைக்கு சாதனா முகாம் நடைபெற்றது இந்த முகாமை மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீதர் அவர்கள் முன்னெடுத்தும் மாவட்ட மற்றும் சமிதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் வரதப்பனூர் கிராமத்தில் மட்டும் 1st Batch – 4 G & 15 M=19. 2nd Batch-2 G பிரசாந்தி சேவைக்கு வருவதாக பெயர் பதிவு செய்துள்ளனர். மற்ற கிராமங்களில் அனைவரிடம் கலந்து சிறப்பான எண்ணிக்கையில் சேவைக்கு வருவதற்கு பதிவு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். அனைவருக்கும் பகவானின் ஆசியுடன் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பகவான் ஆசியுடன் நமது விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக 02/04/2023 அன்று மாவட்ட அளவிலான மகிலாஸ் சாதனா ஷிபிர் ஆன்மீக நிகழ்ச்சி விழுப்புரம் சமிதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சமிதிகளில் இருந்தும் மகிளாஸ் பொறுப்பாளர்கள் & அங்கத்தினர்கள் சுமார் 55 மகிலாஸ் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி காலை 08:00 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு ஓம்காரம், வேதபாராயணன், ஸ்ரீ சாய் பஜன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாவட்ட மகிலாஸ் ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் திருமதி. மனோன்மணி அவர்கள் வரவேற்புரையும் தொடர்ந்து விழுப்புரம் செல்வி.அர்ச்சனா அவர்கள்,
திருமதி.சாவித்திரி அவர்கள், மாவட்ட யுவதிகள் பொறுப்பாளர் திருமதி.விஜயா அவர்கள், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி. செல்வி கண்ணம்மாள் அவர்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை சமிதியை சேர்ந்த திருமதி.கௌரி அவர்கள் திருமதி.பைரவி அவர்கள் திருமதி.சாய் ப்ரியா ஆகியோர் சிறப்பாக உரை நிகழ்த்தினர்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட மகிலாஸ் அனைவரும் தங்கள் சூழ்நிலை மறந்து ஆனந்தமாக இருப்பதற்கு அவர்களுக்குள் விளையாட்டு & பஜன் பயிற்சியும் நடைபெற்றது.
இந்த முகாமின் சிறப்பு இந்த முகாமில் கலந்து கொண்ட மகிலாஸ் அனைவரும் இந்த முகாமில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக வேறு எந்த சேவை பணிகளிலும் (உணவு & தேனீர்) ஈடுபடுவதை தவிர்க்கப்பட்டது.
உணவு வழங்குதல்.தேநீர் தயாரிப்பு போன்ற அனைத்து சேவைகளையும் ஆண் சேவாதவர்கள் முன்னெடுத்து செய்தனர். நிறைவாக மாவட்ட தலைவரின் வழிகாட்டுதல் மற்றும் வருகின்ற காலங்களில் முன்னெடுக்க வேண்டியதையை பற்றிய உரையும் அதைத்தொடர்ந்து மாலை 05:00 மணி அளவில் மகிலாஸ் அனைவரும் ஒன்றிணைந்து பகவானுக்கு மகா மங்கள ஆரத்தி எடுத்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த முகாமை விழுப்புரம் சமிதி பொறுப்பாளர்கள் சிறப்பாக முன்னெடுத்து ஏற்பாடு செய்தனர்
பிரசாந்தி சேவைக்கு சாதனா முகாம்
பகவான் ஆசியுடன் 31/03/2023 இன்று நமது விழுப்புரம் மாவட்ட,கொந்தாமூர் சமிதி ,மழவந்தாங்கல் மண்டலியில் மே மாதத்திற்கான பிரசாந்தி சேவைக்கு சாதனா முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர்களும் சமிதி மற்றும் மண்டலி பொறுப்பாளர்கள் பொதுமக்களும், சேவைக்கு செல்பவர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சிறப்பாக இந்த மண்டலிலிருந்து மே மாத சேவைக்கு 15 நாட்கள் (1 & 2 batch) 11 ஆண்கள் & 12 பெண்களும் வருவதற்கு பெயர் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாராயண சேவை நடைபெற்றது.நிறைவாக பகவானுக்கு மகாமங்களா ஆரத்தியுடன் நிறைவு பெற்றது.
பகவானின் ஆசியுடன்- ஆன்மீக சாதனா முகாம்- கரிஷ்யே வசனம் தவ
(தாங்கள் சொன்னபடி செய்கிறோம்)
05/03/2023 அன்று விழுப்புரம் மாவட்டம்-உளுந்தூர்பேட்டையில் நமது நிறுவனத்தின் ஆன்மீக சாதனாவின்
“கரிஷ்யே வசனம் தவ”
ஆன்மீக சாதனா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகாம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
காலை 08:30 மணிக்கு வேதபாராயணம் , பஜனை இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கியமாக தனிமனித ஆன்மீக சாதனா
,குடும்ப ஆன்மீக சாதனா,
சமூக ஆன்மீக சாதனம்
போன்றவற்றை நமது நிறுவனத்தின் மாநில (தெற்கு) துணைத் தலைவர் திரு.விஜய் கிருஷ்ணன், மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர்
திரு. கணபதி சாய்ராம் அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் திரு.விமல் நாதன் அவர்களும் பகவானுடன் தொடர்பு படுத்தியும் அவரின் வழிகாட்டுதலின்படியும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் அனைத்து சமிதிகளில் இருந்தும் பொறுப்பாளர்களும்
முன்கல சேவாதவர்களும் சுமார் 120 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை உளுந்தூர்பேட்டை சமிதி முன்எடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் மாலை 04:30 அளவில் மாவட்ட தலைவரின் உரை மற்றும் பகவானுக்கு மகா மங்கள ஆரத்தியுடன் இனிதே நிறைவடைந்தது.
பின் குறிப்பு-“இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமிதி பொறுப்பாளர் ஒருவரின் feedback “இதுவரை நாங்கள் மற்றவர்களை சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று தான் நாங்தான் சரியாக வேண்டும் என்பதை புரிந்து கொண்டோம்.”
பகவான் ஆசியுடன் உழவாரப்பணியுடன் சாதனா முகாம்
11 & 12/02/2023 இரு தினங்கள் விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டை சமிதி சார்பாக உழவாரப்பணியுடன் சாதனா முகாம் நடைபெற்றது.
11/02/2023 அன்று ஊரில் அமைந்துள்ள
ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உளுந்தூர்பேட்டை சமிதியுடன் இணைந்து உழவாரப் சேவை மேற்கொள்ளப்பட்டது.
12/02/2023 அன்று காலையில் சமிதியின் மூத்த உறுப்பினர் திரு.முத்துசாமி அவர்களால் கொடி ஏற்றத்துடன் சாதனா முகாம் தொடங்கப்பட்டு ஊரில் பகவானின் பட வீதி உலா பஜன் மற்றும் பஜன் நடைபெற்றது.
சாதனா முகாமின் தொடக்கமாக மகிலாஸ் பொறுப்பாளர்கள் திருவிளக்கு ஏற்றினார். சமிதி கன்வினர் திரு. ஜெயராம் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். உளுந்தூர்பேட்டை சமிதியை சேர்ந்த பாலவிகாஸ் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து மாவட்ட அளவிலான மின்னணு மாத இதழை மாவட்ட பொறுப்பாளர் செல்வி.அர்ச்சனா சாய்ராம் அவர்களால் விவரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிய தலைவர் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் மாவட்டத் தலைவரின் வழிகாட்டு உரையும், மாவட்ட பொறுப்பாளர் திரு.சேரன் அவர்களால் நன்றி உரையும், சமிதி கன்வினர் அவர்களால்
மகா மங்கள ஆரத்தி அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு நாராயண சேவை(250 நபர்களுக்கு) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை , விழுப்புரம், ஏமபேர், எலவனாசுர் கோட்டை சமிதிகளை சேர்ந்தவர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை உளுந்தூர்பேட்டை மற்றும் எலவனாசூர்கோட்டை சமிதிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்
பகவான் ஆசியுடன் 05/02/2023 அன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சமிதி சார்பாக கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சுமார் 80 நபர்கள் பரிசோதனை செய்து கொண்டனர் இவர்களில் 52 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாராயண சேவையும் நடைபெற்றது.
பகவான் ஆசியுடன் 05/02/2023 அன்று விழுப்புரம் மாவட்டம் கொந்தாமூர் சமிதி சார்பாக ஆலங்குப்பம் கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு நாராயண சேவையும் அதைத் தொடர்ந்து அவ்வூரில் அமைந்துள்ள பள்ளியில் சுமார் 30 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட இளைஞர்கள் பொறுப்பாளர் மற்றும் சமிதி பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பகவான் ஆசியுடன் விழுப்புரம் மாவட்டம் ஏமப்பேர் சமிதி. வரதப்பனூர் கிராமத்தில் மெகா சாதனா முகாம் 29/01/2023 அன்று நடைபெற்றது. இந்த இந்த முகாம் புதுவை அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து கிராம மக்களுக்கு பொது மருத்துவ முகாமும் மாணவர்களுக்கு பாலவிகாஷ் அறிமுக வகுப்புகளும், கிராமத்தில் மரக்கன்று நடுதலும், மற்றும் நாராயண சேவையும் நடைபெற்றது. இந்த முகாமில் நமது மாநில SSS VIP பொறுப்பாளர் திரு ரமேஷ் அவர்களும். வரதப்பனூர் கிராம தலைவர் அவர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் சமிதி பொறுப்பாளர்கள் மற்றும் சேவாதாரர்களும் சுமார் 60 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கிராம மக்கள் சுமார் 350 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது மேலும் 20 நபர்களுக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நிறைவாக பகவானுக்கு மகா மங்கள ஆரத்தியும் அதைத் தொடர்ந்து சுமார் 650 நபர்களுக்கு நாராயண சேவை வழங்கப்பட்டது.
பகவான் ஆசியுடன் சமத்துவ பொங்கல் & மெகா சாதனா முகாம்.
நாள்: 07/01/2023
@ 08:30am – 01:00Pm.
இடம்: கிறிஸ்துவ தேவாலயம்.
ஆலம்பூண்டி கிராமம். செஞ்சி வட்டம்.
விழுப்புரம் மாவட்டம்.
நமது விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக செஞ்சி அருகில் அமைந்துள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து கிறிஸ்து தேவாலயத்தில் வழக்கமாக கொண்டாபடும் சமத்துவ பொங்கல் இந்த வருடம் ஸ்ரீசாய் பஜன், கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், இளைஞர்கள் & கிராம மக்களுக்கு இயற்கை பேரிடர் மேலாண்மை அறிமுக பயிற்சி, பால விகாஸ் வகுப்புகள், மரக்கன்றுகள் நடுதல்,
பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு சீருடை & மதிய உணவிற்கான டிபன் பாக்ஸ் வழங்குதல் & நாராயண சேவை போன்ற சேவை பணிகளை ஒருங்கிணைந்த மெகா சாதனா முகாமாக விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து சமிதிகளும் ஒருங்கிணைந்து கொண்டாடினர் .
இந்த நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக இந்த தேவாலயத்தின் அருள் தந்தை திரு.M. காஸ்பர் அவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்து நமது சமிதி உறுப்பினர்களுக்கு வாழ்த்துரை வழங்கியும் சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நமது அகில இந்திய தலைவரின் வழிகாட்டுதலின்படி இந்த தேவாலயத்தில் கிறிஸ்மஸ் மர கன்று,பலவிதமான பழ மரங்கள் சந்தனம்,தேக்கு மூலிகை போன்ற 108 மரக்கன்றுகளை தேவாலயத்தின் அருள் தந்தை, நமது மாநில தலைவர், இஸ்லாமிய சகோதரிகள் மற்றும் நமது சமிதி உறுப்பினர்கள் நட்டனர்.
கிராம மக்களுக்கு நாராயண சேவை வழங்கப்பட்டது.
தேவாலயத்தின் மையப் பகுதியில் நமது பகவானின் உருவப் படத்தை வைத்து நமது சமிதி உறுப்பினர்கள் பஜன் செய்தனர் இதைத்தொடர்ந்து நமது மாநில தலைவர் அவர்கள் தேவாலயத்தின் மையப்பகுதிகள் அமைந்துள்ள தேவாலயத்தின் அருள் தந்தை வாழ்த்துரை வழங்கும் இடத்தில் இருந்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தேவாலயத்தின் அருள் சகோதரி (sister) அவர்கள் வரவேற்புரையும்.
இஸ்லாமிய சகோதரி திருமதி.ஹசின் ரமிசா அவர்கள் ஒற்றுமையை பற்றியும் வலியுறுத்தினார்.
கணக்கன்குப்பம் சமிதி பொறுப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் சேவையின் மகத்துவத்தைப் பற்றியும் உரை நிகழ்த்தினர். நிறைவாக மாவட்ட தலைவர் நிறைவுறை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மையப்பகுதியில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் நமது சமிதி சகோதரிகள் ஒன்றிணைந்து மூவரும் நமது பகவான் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் மகா மங்கள ஆரத்தி எடுத்தனர்.
பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு, மருத்துவ குழுவினர்களுக்கும் நமது மாநில தலைவர் பரிசுகளையும் & பிரசாதமும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நமது மாவட்டத்தின் கணக்கன்குப்பம், செஞ்சி மற்றும் விழுப்புரம் சமிதி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்தனர்.
சாய்ராம் பகவானின் ஆசிர்வாதத்துடன் பிரசாந்தி சேவா சாதனா முகாம் இன்று 02.10.2022 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்ட தலைவர் துவக்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நமது மாநில முண்ணால் சேவை ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ்குமார், நமது மாநில சேவை ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜேந்திரன், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் திரு. கண்ணன், முன்னால் தேனி மாவட்ட தலைவர் திரு. பாலசுப்பிரமணியன் மற்றும் மாநில மகளிர் சேவை ஒருங்கினைப்பாளர் திருமதி. கீதா சுந்தர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந் நிகழ்ச்சியில் 100 சேவாதள தொண்டர்கள் ( ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் திரு. காந்தி நண்றி உரை கூறினார். பகவானுக்கு மகா மங்கள ஆரத்தியுடன் இந்த முகாம் இனிதே நிறைவடைந்தது.
சிறப்பு சாதனா முகாம்
பகவான் ஆசியுடன் (23/09/2022) அன்று நமது விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக அரசுர் கிராமத்தில் இயங்கி வரும் செவிலியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் நமது பிரசாந்தி சேவைக்கு செல்ல இருக்கும் மாணவிகளுக்கு கல்வி நிறுவனத்தில் சிறப்பு சாதனா முகாம் நடைபெற்றது.
இந்த நிறுவனத்தின் 30 மாணவிகள் பிரசாந்தி சேவையில் மூன்று(1,2 & 3 Batches) பிரிவுகளிலும் சேவை புரிய உள்ளார்கள்.
மேலும் நமது மாவட்டத்தில் இருக்கும் சுமார் 60 யுவதிகள் மற்றும் சமிதி உறுப்பினர்களுக்கு நமது நிறுவனத்தின் வழிகாட்டுதல் தொடர்பாக ஒரு சாதனா முகாம் விழுப்புரம் சமிதியில் அன்று மாலை நடைபெற்றது..
இந்த இரு முகாம்களிலும் நமது நிறுவனத்தின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் (பேரிடர் மேலாண்மை,பிரசாந்தி சேவா) திரு தியாகராஜன் அவர்கள்,
நமது மாநில பேரிடர் மேலாண்மை இணை பொறுப்பாளர் திரு. ரூபேஷ் குமார் அவர்கள், நமது மாநில மஹிளா இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
திருமதி. சாய்தேவி அவர்கள் மற்றும் நமது மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தத்துகிராம சேவா
பகவானின் ஆசியுடன் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சமிதி பொது மருத்துவம், நாராயண சேவா, பால விகாஸ், இயற்கை பேரிடர் விழிப்புணர்வு,& ஸ்ரீ சாய் பஜன் ஆகியவற்றை ஒருங்கிணைந்த தத்துகிராம சேவா
04/09/2022 அன்று நமது மாவட்டம் விழுப்புரம் சமிதியின் தத்துகிரமம் மழவந்தாங்கல் கிராமத்தில் விழுப்புரம் சமிதியை சேர்ந்த சேவாதலத் தொண்டர்கள் *பொது மருத்துவம், நாராயண சேவா, பாலவிகாஸ், ஸ்ரீ சாய் பஜன் & இயற்கை பேரிடர் விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த கிராம சேவா மேற்கொண்டனர்.
இந்த முகாம் புதுவை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனை & கல்லூரி நிறுவனத்துடன் இணைந்து நடத்தினர்.
இந்த முகாமின் சிறப்புகள்- மருத்துவ முகாமில் சுமார் 386 கிராம மக்கள் பயன் பெற்றார்கள்-
28 நபர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இயற்கை பேரிடர் விழிப்புணர்வு முகாமில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கிராம மக்களில் சிறுவர் சிறுமியர்கள் பாலவிகாஸ் வகுப்புபில் கலந்து கொண்டனர்.
பொது நாராயண சேவையில் உணவு வழங்கப்பட்டது.
கோடை சிறப்பு மோர் பந்தல்
பகவான் ஆசியுடன், ஸ்ரீ சத்ய சாய் சமிதி விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம்.
இன்று (10/04/2022) விழுப்புரம் சமிதி சார்பாக கடந்த பல வருடங்களாக கோடைகாலத்தில் தினமும் மோர் பந்தல் சேவா நடைபெற்று வந்தது கடந்த இரண்டு வருடங்களாக சேவை தொடர முடியவில்லை. தற்போது தொடங்கியுள்ளனர். இந்த சேவையில் மாவட்ட பொறுப்பாளர்களும் சமிதி பொறுப்பாளர்களும் மற்றும் அங்கத்தினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பகவான் ஆசியுடன் வாழ்த்துக்கள்
பஜனா மண்டலி தொடக்க விழா
பகவானின் ஆசியுடன் ஸ்ரீ சத்ய சாய் பஜனா மண்டலி தொடக்கம் நாள்: 13/03/2022.
ஸ்ரீ சத்ய சாய் சமிதி உளுந்தூர்பேட்டை
இடம்:ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில். உளுந்தூர்பேட்டை.
நிகழ்ச்சி சிறப்பு.
12/03/2022- இத்திருக்கோயிவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.
13/03/2022@5:20Am. இக்கோவிலில் ஓம்காரம், ஸ்ரீ சத்யசாய் சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் பஜனா மண்டலி தொடக்க விழா ஸ்ரீ சத்ய சாய் உளுந்தூர் சமிதி கன்வீனர் திரு பூராமூர்த்தி அவர்கள் வரவேற்புரை யுடன் தொடங்கப்பட்டது.
மேலும் இதன் சிறப்பாக உளுந்தூர்பேட்டை நகரமன்ற துணைத் தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றனார். திருகோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களும் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நமது மாவட்ட பொறுப்பாளர்கள் உரை நிகழ்த்தினர்
சமிதி பொறுப்பாளர்களும் சமிதி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பகவானுக்கு மகா மங்கள ஆரத்தியும் அதைத்தொடர்ந்து நாராயண சேவையும் வழங்கப்பட்டது.
சாதனா முகாம்
பகவானின் ஆசியுடன் இன்று (12/03/2022) மார்ச் பர்த்தி சேவைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சாதனா முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்களும்,சமிதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் உழவாரப்பணி
பகவானின் ஆசியுடன் இன்று (12/03/2022) நமது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சமிதி சார்பாக உளுந்தூர்பேட்ட ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. சமிதி சார்ந்த 10 ஆண் சேவாதள தொண்டர்களும் மற்றும் 10 மகிலா சேவா தள தொண்டர்களும் கலந்துகொண்டு சேவையாற்றினார்.
விளக்கு பூஜை
பகவானின் ஆசியுடன் நேற்று வெள்ளிக்கிழமை (21/01/2022) விழுப்புரம் மாவட்ட அளவில் சுமார் 81 நபர்கள் அவரவர் வீட்டில் விளக்கு பூஜை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.
குறிப்பாக 1944-45 ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் அருகில் பெண்ணைவளம் என்ற கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்களுக்கு பகவான் அவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் காட்சி அளித்து பல அற்புதங்களை நடத்தி உள்ளார் என்பதனை நாம் அனைவரும் அறிந்த பகவானுடன் பல ஆண்டுகள் இருந்த திரு.T.R.சாய் மோகன் அவர்கள் மூலமாக அறிந்து அந்த கிராமத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் உளுந்தூர்பேட்டை சமிதியை சேர்ந்தவர்களும் சென்று அங்கு விளக்கு பூஜை,ஸ்ரீ சாயி பஜன் மற்றும் மகா மங்கள ஆரத்தியுடன் கிராம மக்களுக்கு பிரசாதமும் வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் அக்கிராமத்தில் விரைவில் பஜனா மண்டலி தொடங்குவதற்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பஜனா மண்டலி தொடங்கப்பட்டது
பகவானின் பரிபூரண ஆசியுடன் இன்று(20/01/2022) விழுப்புரம் சமிதிக்கு உட்பட்ட வளவனூர் நகரத்தில் ஸ்ரீ சத்ய சாயி பஜனா மண்டலி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள், சமிதி உறுப்பினர்களும் ஊர் மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பஜனா மண்டலி தொடங்கப்பட்டது
பகவானின் ஆசியுடன் இன்று 11.01.22 விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பம் சமிதிக்கு உட்பட்ட தேவிகுளம் கிராமத்தில் பஜனா மண்டலி தொடங்கப்பட்டது.
மேலும் இக்கிராமத்தை திண்டிவனம் சமிதிக்கு உட்பட்ட தத்து கிராமமாகுவும் அறிவிக்கப்பட்டது. காலை 11 மணி அளவில் ஓம்காரம் பஜன் & மகா மங்கள ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம மக்களுக்கு நமது பேரிடர் மேலாண்மை குழுவினரால் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கப்பட்டது இதைத்தொடர்ந்து இக்கிராமத்தில் நாராயண சேவையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், நடுக்குப்பம், சமிதிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஸ்ரீ சத்ய சாய் சேவா தள பயிற்சியாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி திட்டம்-கட்டம்-1 முகாம்
பகவானின் ஆசியுடன் நேற்று (29/08/2021) விழுப்புரம் & கடலூர் மாவட்டங்களுக்கான ஸ்ரீ சத்ய சாய் சேவாதல பயிற்சியாளர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி திட்டம்#கட்டம்-1 முகாம் விழுப்புரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமிற்கு நமது தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. சுரேஷ் சாய்ராம் அவர்கள் காணொளி மூலமாக சிறப்புரையற்றினார். நமது மாநில சேவை ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் குமார் சாய்ராம் அவர்களும் மாநில இணை சேவை ஒருங்கிணைப் பாளர்கள் திரு.ராஜன் சாய்ராம் & திரு.சர்வேசன் சாய்ராம் அவர்களும் முகாமை வழி நடத்தி சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவில் நமது மெட்ரோ மாநிலத் தலைவர் திரு. எஸ். ஆர். சந்திரசேகர் சாய்ராம் அவர்கள் இனி வருகின்ற காலங்களில் நமது நிறுவனங்களின் சேவைப் பணிகள் எப்படி முன்னெடுக்க வேண்டுமென்று என்பதைப் பற்றியும் விரிவாக வழிகாட்டியுடன் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த முகாமையில் கடலூர் மாவட்ட தலைவர் அவர்கள் வரவேற்புரை வழங்கியும் விழுப்புரம் மாவட்ட தலைவர் உரை நிகழ்த்தினர். மேலும் இரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரிவிலும் செயல்திட்டங்களை எடுத்துரைத்தனர்.இந்த முகாமிற்கு இரு மாவட்ட சமிதிகளின் பொறுப்பாளர்களும், சேவாதளர்கள்சுமார் 260 பேர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் சமிதி சார்ந்த பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.சிறப்பு கலந்து கொண்ட அனைவரும் நமது பகவானுக்கு மகா மங்கள ஆரத்தி எடுத்தனர்
ஜெய் சாய்ராம்
ஸ்ரீ சத்ய சாய் நித்திய நாராயண சேவை – சுதந்திர தின சிறப்பு
பகவானின் ஆசியுடன் ஸ்ரீ சத்ய சாய் நித்ய நாராயண சேவை சுதந்திர தின சிறப்பு விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நித்திய நாராயண சேவை வாயிலாக பல சமிதிகள் தினமும் உணவு பொட்டலங்களை வழங்கிவருகிறது. குறிப்பாக உளுந்தூர்பேட்டை சமிதி & விழுப்புரம் சமிதியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
15/08/2021 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சமிதி #120 உணவு பொட்டலங்களையும், விழுப்புரம் சமிதி #101 உணவு பொட்டலங்களை யும் இனிப்புடன் வறுமையில் வாடுபவர்களுக்குவழங்கினார்கள். சிறப்பு உளுந்தூர்பேட்டை சமிதியை சேர்ந்த இஸ்லாமிய சாய் பக்தர் உணவை சமைத்து வழங்கினார்.
ஸ்ரீ சத்ய சாய் நித்திய நாராயண சேவை
பகவானின் ஆசியுடன் 21/07/2021 ஸ்ரீ சத்ய சாய் நித்திய நாராயண சேவை வாயிலாக பக்ரீத் திருநாள் முன்னிட்டு விழுப்புரம் சமிதியின் சார்பாக 100 நபர்களுக்கு வெஜிடபிள் கலவை சாதம், இனிப்பு* தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது.
ஜெய் சாய்ராம்
ஸ்ரீ சத்ய சாய் நித்திய நாராயண சேவை
பகவானின் ஆசியுடன் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சமிதி சார்பாக தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ஸ்ரீ சத்ய சாய் நித்திய நாராயண சேவை நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய சிறப்பாக போலீஸ் அதிகாரி DSP. நமது சேவையில் பங்குகொண்டு வாழ்த்துத்தும் தெரிவித்தார்.