District President: Sri K Rajeswaran
Email: [email protected]
AUM SRI SAIRAM
ஓம் ஶ்ரீ சாய் ராம். பகவான் பாபாவின் அருளால் இன்று (06-08-2023) ராம்நகர் மந்திரில் ஶ்ரீ சத்ய சாய் திறன் மேம்பாட்டு மையம் ( Sri Sathya Sai Skill Development Center ) சார்பாக யுவதிகளுக்கு Tally course பயிற்சி தொடங்கப்பட்டது.இதில் 15 யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
ஜெய் சாய் ராம்
ஓம் ஶ்ரீ சாய் ராம். பகவான் பாபாவின் அருளால் இன்று (06-08-2023) ராம்நகர் மந்திரில் இலவச கண் சிகிச்சை முகாம் சாய் இளைஞர்கள் சார்பாக நடை பெற்றது.இந்த முகாமில் 272 *பயனாளர்கள் பங்கு கொண்டு அதில் 41 பயனாளர்கள் கண் ஆபரேஷன் செய்ய தேர்வாகி உள்ளனர்.
ஜெய் சாய் ராம்
நமது அன்பு தெய்வம் பகவான் ஸ்ரீ சாய் பாபா அவர்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தால் ஆடி 18 தினத்தை முன்னிட்டு 3 ஆகஸ்ட் 2023 ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி ராம் நகர் திருப்பூர் சார்பில் நெறிப்பெரிச்சல் பால விகாஸ் வகுப்பின் நிகழ்ச்சியாக அம்மன் கோயிலிலே ஒரு சிறப்பு பஜனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் புதிதாக வந்த பொதுமக்களுக்கு பால விகாஸ் பற்றியும் பிரசாந்தி சேவை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஜெய் சாய்ராம் .
நமது அன்பு தெய்வம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களுடைய ஆசீர்வாதத்தால் திருப்பூர் விஜயாபுரம் பஜ்ரமண்டலி சார்பாக ஆகஸ்ட் 1 2023 ஆடி மாத பௌர்ணமி ரத உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.சாய்ராம்.
ஓம் ஸ்ரீ சாய்ராம்*
பேரிடர் மேலாண்மை (Disaster Management) தீவிர பயிற்சி (Intensive training) வரும் ஆகஸ்ட் 13 ,14 ,15 ஆகிய தேதிகளில் மேட்டூரில் உள்ள கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு இதற்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நமது ராம் நகர் மந்திரில் ஜூலை 30 அன்று
காலை 8.30-8.45 வேத பாரயணம்* ,
8.45-9.00 மணிக்கு பஜன்
9-12.30 மணி முதல் பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
எனவே இளைஞர்கள்* மற்றும் பாலவிகாஸ் குரூப் 3 மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஜெய் சாய் ராம் .
ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
ஓம் ஸ்ரீ சாய்ராம் இன்று 21/7/2023 பல்லடம் ரோடு யூனிட் டு சமிதி சார்பில் புதிதாக துவக்கப்பட்ட பால விகாஸ் சென்டரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது
அதில் 19 திருவிளக்குடன் பாலவிகாஸ் பெற்றோர்களும் சமிதி மகிளாக்களும் 30 பேர் கலந்து கொண்டனர்
ஜெய் சாய்ராம்
சாய்ராம், சுவாமியின் அருளால் ராயபுரம் சமிதி மற்றும் காளிபாளையம் பஜனா மண்டலி இணைந்து 23.07.2023 அன்று காளிபாளையத்தில் நடத்திய ஆடிமாத விளக்கு பூஜை 19 மகிளா உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெற்றனர்
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் பாபாவின் அருளால் இன்று ராம்நகர் மந்திரில் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது அதில் 16 சாய் இளைஞர்கள் மற்றும் 5 பால விகாஸ் குரூப் 3 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் சத்ய சாய் நிறுவனத்தின் தமிழ்நாடு தெற்கு பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் திரு.ரூபேஷ் சாய்ராம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மற்றும் அவரது மாணவரான திரு.மருது சாய்ராம் அவர்கள் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு பயிற்சியிணை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். குரு பூர்ணிமாவை முன்னிட்டு நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி குளத்துப்பாளையம் சமிதியில் காலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பாக பால விகாஸ் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை நடைபெற்றது
[30 பெற்றோர்களும் 30 மாணவர்கள் பாத பூஜையில் கலந்து கொண்டனர்
சாய்ராம், 03.07.2023 அன்று குருபூர்ணிமா பல்லக்கு சேவை, ராயபுரம் சமிதி, ஆண்கள், பெண்கள், பாலவிகாஸ் குழந்தைகள் என சுமார் 120 அங்கத்தினர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற்றனர்
சாய்ராம் .நேற்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடைபெற்ற பல்லுக்கு சேவையில் திருப்பூரில் உள்ள பால விகாஸ் குருமார்களுக்கும் மகிலா அன்பர்களுக்கு பகவான் பல்லக்கை எடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.சாய்ராம்.
ஓம் ஸ்ரீ சாய்ராம்
குரூப் பூர்ணிமாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் நேற்றைய தினம் பல்வேறு பால விகாஸ் சென்டர்களிலும் மாணவர்கள் இல்லங்களிலும் பெற்றோர்களுக்கு பாத பூஜை சிறப்பாக நடைபெற்றது
இன்றைய தினம் 3.7.23 அன்று பள்ளி பால விகாஸ் திட்டத்தில் கீழ் உள்ள ஆலயா அகாடமி பள்ளியில் சிறப்பாக பெற்றோர்களுக்கு பாத பூஜை விழா காலை 10 மணி அளவில் நடைபெற்றது
அதில் 40 பெற்றோர்களும் 30 மாணவர்களும் கலந்து கொண்டனர் பகவானின் பேர்ருளால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் பேரருளால் பிரசாந்தி நிலையத்தில் ஜூன் 9, 10, 11ல் பாலவிகாஸ் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது
அதில் நமது மாவட்டத்தில் இருந்து பால விகாஸ் குரூப் 3 முடித்த மாணவர்கள் 8 பேரும் , குருமார்கள் 5 பேரும், பெற்றோர்கள் மற்றும் சமிதி உறுப்பினர்கள் 8 பேரும் ஆக 21 பேர் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் நமது மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்
சாய்ராம். வைகாசி மாத பல்லக்கு சேவை திருப்பூர் முத்து நகர் சேவா சமிதி சார்பில் ஜூன் மாதம் 4 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஓம் ஸ்ரீ சாய்ராம். நமது பகவானின் பெரும் கருணையால் இந்த வருடத்திற்கான கோடைகால ஆன்மீக பண்பாட்டு பயிற்சி முகாம் கடந்த (26, 27 மற்றும் 28) மூன்று நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று இனிதே நிறைவேறியது. இந்த பயிற்சி முகாமில் சுமார் 120 குழந்தைகளும், 20 குருமார்களும், 20 சமிதி உறுப்பினர்களும் மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர். பங்கேற்ற குழந்தைகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கும் ஆன்மீகம், பண்பாடு, தூய்மை, குப்பை மேலாண்மை, ஓவியம் யோகா, தியானம், தினமும் குழந்தைகள் மகிழும் வண்ணம் விளையாட்டுக்கள் என மூன்று நாட்கள் அனைத்து குழந்தைகளும் மிகவும் குதூகலமாக இருந்து மகிழ்வோடு நம் பகவானின் சன்னதியில் நேரத்தை செலவிட்டதை நம்மால் கண்கூடாக காண முடிந்தது. மூன்று நாட்களும் முழுமையாக கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இத்தகைய சிறப்பான பண்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து குருமார்களுக்கும், சமிதி அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பகவானின் பரிபூரண ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கிடைத்திட வாழ்த்துக்கள்.
கொங்கு நகர்: ஸ்ரீபாலமுருகன் கோவிலில் உழவாரப் பணி
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஞாயிற்றுக்கிழமை 14/ 5/2023 அன்று முத்து நகர் சமிதி சார்பாக உழவாரப் பணியானது
கொங்கு நகர்: ஸ்ரீபாலமுருகன் கோவிலில்
சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து சமிதிகளை சேர்ந்த சாய் பக்தர்கள் (12 ஆண்கள்+19 பெண்கள்) 31 பேர் இந்த உழவார பணி சேவையில் கலந்து கொண்டனர்.
ஜெய் சாய்ராம்
ஈஸ்வரம்மா தின விழா
ஓம் ஸ்ரீ சாய்ராம். பெற்றோர் வழிபாடு திருப்பூர் மாவட்டம் ராம் நகர் சமிதி திரு வி க நகர் பால விகாஸ் சென்டரில் பெற்றோர்களுக்கு பாத பூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
நீர் மோர்சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மற்றும் சாய்ராம்.
பகவானின் பேரருளால் சித்திரை 1ம் தேதி தொடங்கிய (14/04/2023) நீர் மோர்சேவை இனிதாக இன்று சித்திரை கடைசி தேதியில் முடிவடைந்தது. சேவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சேவை முலம் சித்திரை மாத வெய்யிலுக்கு தாகம் தீர்க்கும் சுவையான மோர் பொதுமக்களுக்கு அன்புடன் வழங்கப்பட்டது.
அனைத்து மக்களும் மோரை விரும்பி வாங்கி குடித்தனர்.
இந்த சேவையில் பங்கு கொண்ட அனைத்து சமிதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு பகவான் எல்லா ஆசீர்வாதங்களையும் வழங்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
அனைவருக்கும் அநேக கோடி வாழ்த்துக்கள்,நன்றிகள்.
புத்தாண்டு நன்னாளில் பகவானின் பல்லக்கு ஊர்வலம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் திருப்பூர் மாவட்டம் காந்தி நகர் சமிதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பகவானின் பல்லக்கு ஊர்வலம் 14-04-23 வெள்ளிக்கிழமை அன்று சோபக்ருத் புத்தாண்டு நன்னாளில் கொடைக்கானல் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதிகளில் சாயி அன்பர்கள் , பக்தர்கள் நகர சங்கீர்த்தன் உடன் வலம் வந்து பகவான் கொடைக்கானல் வாழ் மக்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு லட்டு, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வில் மதுரை மாவட்ட சாயி அன்பர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், கொடைக்கானல் சாயி சமிதி, மூஞ்சிகல் சாயி சமிதி சேவாதள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜெய் சாய்ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவானின் அருளால் 14/03/23 வெள்ளிகிழமை அன்று சோபக்ருத் புத்தாண்டு நன்னாளில் சாய் ஸ்ருதி மந்திரில் பிற்பகல் 500 நபர்களுக்கு நாராயண சேவை நடைபெற்றது.
அருகில் உள்ள பகுதி மக்களுக்கு வாகனம் மூலம் பகவானின் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்- காந்திநகர் சமிதியினர் மற்றும் கொடைக்கானல் சமிதிகளின் சேவாதள் மிகச் சிறப்பாக சேவை செய்து பகவானின் அருளாசி பெற்றனர்.
ஜெய் சாய்ராம்
அருள்மிகு பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் பக்தர்களுக்காக சேவை பணிகள்
ஓம் ஸ்ரீ சாய்ராம். அருள்மிகு பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் பக்தர்களுக்காக சேவை பணிகள் மார்ச் 31 முதல் ஏப்ரல் மாதம் முழுவதும் வெள்ளி , சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடை பெறுகிறது. இந்த சேவையில் கோவை மாவட்ட சாய் இளைஞர்கள் 8 பேர் உடன் இணைந்து திருப்பூர் மாவட்டம் சார்பாக சாய் இளைஞர்கள் 8 பேர் மற்றும் தமிழ்நாடு தெற்கு மாநில இளைஞரணி பொறுப்பாளர் திரு. பிரசன்ன வெங்கடேஷ் அவர்களும் நேற்று இரவு 7.30 மணி முதல் இன்று காலை 3.30 மணி வரை கலந்து கொண்டு ஒரு முறை மட்டுமே உபயோக படுத்தும் பொருட்கள் பக்தர்களிடம் இருந்து சேகரித்தல் அகற்றல் மற்றும் வாகன நிறத்துமிடம் மற்றும் போக்குவரத்து சரி செய்தல் ஆகிய சேவை பணிகளில் சிறப்பாக செய்தனர்.
சாய் ராம்.
இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
சாய்ராம்!!! இன்று 08.04.2023 சனிக்கிழமை அன்று நமது உடுமலை ஶ்ரீ சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் உடுமலை ஜி வி ஜி மகளிர் கலைக் கல்லூரியும் இணைந்து இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் ஜி வி ஜி மகளிர் கலைக் கல்லூரியில் சிறப்பாக நடத்தப்பட்டது.
நமது மாவட்டத்தலைவர் அவர்கள் துவக்க உரையாற்றினார் மற்றும் கல்லூரி இயக்குநர் அவர்களும் ஏற்புரையுடன் தன் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். மேலும் கல்லூரி முதல்வர், NCC இயக்குநர் மற்றும் சமிதி பொறுப்பாளர்களுடன் NCC & NSS மாணவிகளும் திரளாக (116 பேர்) கலந்து கொண்டனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
மற்றும் அவர்தம் குழுவினர்கள் சிறப்பானதொரு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியினை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வழங்கினார்கள்.
மாணவிகளும் சேவைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுடன் அவர்கள் தம் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். வருகைதந்த அனைவருக்கும் கல்லூரி மற்றும் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பயிற்சி முகாம் தேசிய கீதத்துடன் இனிதாக நிறைவடைந்தது.
ஜெய் சாய்ராம்
பக்தர்கள் இல்லத்தில் நாற்று பராமரிக்கும் சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம். ஶ்ரீ சத்ய சாய் பிரேம தரு. திருப்பூர் மாவட்டம்
பக்தர்கள் இல்லத்தில் நாற்று பராமரிக்கும் சேவை
சுவாமியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி மரக்கன்றுகள் இந்தியா முழுவதும் நட திட்டமிட பட்டுள்ளன.
அதை முன்னிடடு வருகின்ற 26.3.2023 அன்று காலை 6.30 மணிக்கு காங்கேயம் சாலையில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவில் விதைகளால் ஆன மரக்கன்றுகளை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தேவையான மரக்கன்றுகளின் விதைகளை வாங்கி வீட்டில் பராமரித்து வளர்த்து இந்த ஆண்டு சுவாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் அந்த விதைகளால் ஆன மரக்கன்றுகளை நட உள்ளோம்.
எனவே அனைவரும் கலந்துகொண்டு
நாற்று பராமரிக்கும் சேவையில் இணைந்து பகவான் அவர்களின் அருள் பெற்றிடவும்.
நன்றி. சாய் ராம்.
பௌர்ணமி பல்லக் சேவை
சாய்ராம் கடந்த திங்கட்கிழமை மார்ச் 6, 2023 திருப்பூர் குளத்துப்பாளையம் சமிதியில் பௌர்ணமி பல்லக் சேவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பால விகாஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 80 பேர் கலந்துகொண்டு நமது அன்பு தெய்வத்தின் ஆனந்தத்தை உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் அனுபவித்தார்கள். ஜெய் சாய்ராம்.
ஒம் ஸ்ரீ சாய்ராம். அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
இன்று ராம் நகர் மந்திரில் இலவச கண்சிகிச்சை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வெளி நோயாளிகளாக 254 பேரும் கண் அறுவை சிகிச்சைக்கு 51 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பயனாளிகள் இன்று திருப்பூர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
அவர்கள் அனைவருக்கும் கண் அறுவை சிகிச்சை நன்றாக நடைபெற்று அவர்கள் நலமுடன் வீட்டிற்கு வர நாம் பகவான் அவர்களை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
ஓம் ஸ்ரீ சாய் ராம் . சேரன் நகர் சமிதி சார்பாக இன்று 5.3.2023 ஸ்ரீ ஜி நகர் பகுதியில் 40 மரக்கன்றுகள் நடப்பட்டது .
ராக்கியாபாளையம் பிரிவு , காங்கேயம் ரோடு திருப்பூர்.
Inauguration of new Sri Sathya Sai prayer hall at Udumalpettai main town. Sairam also conducted Tirupur District office Bearers meeting. (20 Feb 2023)
Aum Sri Sai Ram. With the divine blessings of our beloved Bhagawan Sri Sathya Sai Baba, The Mahila Youth Sadhana Camp was held successfully at Sri Sathya Sai Vihar, PN.Road, Tirupur on 19th February 2023(Sunday).
Around 15 Mahilas enthusiastically participated in the camp which started with vedam & Bhajan, followed by a Disaster Awareness Program by Mr. Rupesh Kumar, SSSDM, Joint Coordinator and the State Youth Coordinator(M) Mrs. Saidevi Rupesh Kumar and a talk by Selvi. Abinaya on Sri Sathya Sai Skill Development workshop, followed by Sri.R.Sai Vignesh’s session on waste management & vote of thanks by Sri.K.Rajeshwaran, District President and ended with Mangala Aarati.
Thank you. Jai Sai Ram
ஓம் ஸ்ரீ சாய்ராம். அனைவருக்கும் இனிய வணக்கம். திருப்பூர் சாய் இளைஞர்கள் ஏழு பேர் (19-02-2023) செங்கபள்ளியில் உள்ள மகிழ்ச்சி கருணை இல்லம் சென்று அரிசி ஒரு சிப்பம் அமிர்தகலசம் கொடுத்தும், பஜன் பாடியும், சுவாமியின் அனுபவங்கள் பற்றியும் அவர்களிடையே பகிர்ந்து கொண்டனர்.
ஜெய் சாய் ராம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். அகில உலக நன்மைக்காக இன்று ஒரே சமயத்தில் அனைத்து ஸ்ரீ சத்ய சாயி மையங்களிலும் விளக்குப் பூஜை வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றதை நாம் அறிவோம். அதேபோல் இன்று திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து சத்ய சாயி சேவா சமிதிகளிலும் பகவானின் பெரும் கருணையால் விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் எட்டு இடங்களில் விளக்கு பூஜை நடைபெற்றது அதில் 102 மஹிளாக்கள் பங்கு பெற்றார்கள்.
ஜெய் சாய்ராம்.
இலவச கண் சிகிச்சை முகாம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். அனைவருக்கும் இனிய வணக்கம் மற்றும் சாய்ராம்.
05/02/2023 நடைபெற்ற ராம்நகர் மந்திர் இலவச கண் சிகிச்சை முகாமில் வெளி நோயாளி 257 மற்றும் ஆபரேஷன் 48 பேர் பகவான் அருளால் பயன் பெற்றனர்.
பிரசாந்தி சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம். 05/02/2023 ராம் நகர் மந்திரில் சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மாநில துணை சேவை ஒருங்கிணைப்பாளர் *திரு. ராஜன் அவர்கள் பிரசாந்தி சேவையைப் பற்றியும் பிரசாந்தி சேவையில் நாம் பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் பகிர்ந்து கொண்டார்.
SSSBIP ன் ஒருங்கிணைப்பாளர் *திரு.ரமேஷ் அவர்கள் தத்து கிராமம் எவ்வாறு தேர்ந்து எடுப்பது மற்றும் சமிதி சார்பாக மேலும் கிராமங்களை தத்து எடுத்து சிறப்பாக சேவை செய்ய கேட்டு கொண்டார்.
தேனி மாவட்டம் தலைவர் அவர்கள் சேவையின் நோக்கம் மற்றும் அதன் மகிமையும் சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.
ஓம் ஸ்ரீ சாய்ராம். அனைவருக்கும் இனிய வணக்கம் மற்றும் சாய்ராம் .
தை மாத பௌர்ணமி ஸ்வாமி பல்லக்கு ஊர்வலம் (05-02-2023) பல்லடம் ரோடு யூனிட் 1ன் சார்பாக சாயி சகோதர் திரு. குமரவேல் அவர்களின் இல்லத்தில் பகவான் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
அகில உலக நன்மைக்காக விளக்குப் பூஜை
ஓம் ஸ்ரீ சாய்ராம். அகில உலக நன்மைக்காக இன்று ஒரே சமயத்தில் அனைத்து ஸ்ரீ சத்ய சாயி மையங்களிலும் விளக்குப் பூஜை வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றதை நாம் அறிவோம். அதேபோல் இன்று திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து சத்ய சாயி சேவா சமிதிகளிலும் பகவானின் பெரும் கருணையால் விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் எட்டு இடங்களில் விளக்கு பூஜை நடைபெற்றது அதில் 102 மஹிளாக்கள் பங்கு பெற்றார்கள்.
ஜெய் சாய்ராம்.
தை வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ சக்கர பூஜை
ஓம் ஸ்ரீ சாய்ராம். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி திருப்பூர் மாவட்டம் காந்திநகர் சமிதியில் தை வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ சக்கர பூஜையானது நடைபெற்றது. அதில் 50 பேர் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர். ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர நாமாவளி மற்றும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வேதத்துடன் பஜன் மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
ஜெய் சாய்ராம் (03.02.2023)
Eye camp conducted at Koduvai Government higher secondary school on 29th Jan. Total 142 screened .selected for surgery 36 .Sairam
ஓம் ஸ்ரீ சாய்ராம். திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையம் கோவிந்தராஜ் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற உழவாரப் பணியில் திருப்பூர் அனைத்து சேவா சமதிகளின் சார்பில் அனைவரும் கலந்து கொண்டனர்.
சுமார் 30 பால விகாஸ் குழந்தைகள் 30 இளைஞர்கள் மற்றும் 20 சத்யசாய் சேவா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
காலை 9 மணிக்கு சாயி பஜனுடன் துவங்கி மதியம் 3 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் உழவாரப்பணி நிறைவு பெற்றது ஜெய் சாய்ராம்
Inauguration of family Narayanan seva at Tirupur District on 8th Jan 2023
சாய்ராம் கடந்த ஜனவரி 4, 2023 கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 865 மாணவ மாணவியருக்கு கண் பரிசோதனை செய்து 42 மாணவ மாணவியருக்கு கண்ணாடிகள் இன்று கொடுவாய் பஜனா மண்டலி கன்வினர் மருத்துவர்கள் மற்றும் பள்ளி முதல்வர் வழங்கினார்கள் சாய்ராம்.
Trees Plantations at Tirupur District on occasion of Mahara sankranthi
பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்
கொடுவாய் ப பஜனா மண்டலி சார்பில் 04.0122 ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினரால் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது
இந்த முகாமினை அவினாசி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் கொடுவாய் வார்டு கவுன்சிலர் ஆகியோர் முன் நின்று துவக்கி வைத்துள்ளனர்
இந்த முகாமில் 849 பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது அதில் 22 மாணவர்களுக்கு மருத்துவமனை பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டது 42 மாணவர்களுக்கு கண்ணாடி வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பல்லடம் ரோடு சமிதி கன்வினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர
Ekadasha Rudh
Ekadasha Rudhra Yagnam
Sairam With our beloved Bhagawan’s blessings Ekadasha Rudhra Yagnam for the Global welfare of the entire Humanity was conducted at Sri Sathya Sai Community Centre, Ram Nagar, Tirupur on 30 Sep 2021
Multi-faceted Training Program for Youth
With blessings of Swami, a multi faced training introductory programme for Youth on various topics was held on 12.09.2021.
The topics were:
1)Disaster Management and first aid,
2)spoken English, Educating life skills for Youth
3)Basic computer training course & Introduction to Tally, python and
4)Initiation of district level sports meet
Jai Sairam
ra Yagnam
Sairam With our beloved Bhagawan’s blessings Ekadasha Rudhra Yagnam for the Global welfare of the entire Humanity was conducted at Sri Sathya Sai Community Centre, Ram Nagar, Tirupur on 30 Sep 2021
Multi-faceted Training Program for Youth
With blessings of Swami, a multi faced training introductory programme for Youth on various topics was held on 12.09.2021.
The topics were:
1)Disaster Management and first aid,
2)spoken English, Educating life skills for Youth
3)Basic computer training course & Introduction to Tally, python and
4)Initiation of district level sports meet
Jai Sairam
ஓம் ஸ்ரீ சாய்ராம். திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையம் கோவிந்தராஜ் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற உழவாரப் பணியில் திருப்பூர் அனைத்து சேவா சமதிகளின் சார்பில் அனைவரும் கலந்து கொண்டனர்.
சுமார் 30 பால விகாஸ் குழந்தைகள் 30 இளைஞர்கள் மற்றும் 20 சத்யசாய் சேவா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
காலை 9 மணிக்கு சாயி பஜனுடன் துவங்கி மதியம் 3 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் உழவாரப்பணி நிறைவு பெற்றது ஜெய் சாய்ராம்.
ஓம் ஸ்ரீ சாய்ராம். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஆசியுடன் திருப்பூர் மாவட்டத்தில் பாலவிகாஸ் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான திறனாய்வு சிறப்பாக 27/11/22 அன்று நடைபெற்றது. அனைத்து சமிதியைப் சார்ந்த 127 குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் முதலிடம் பெற்ற 19 குழந்தைகள் மாநில அளவில் வேலூரில் நடைபெறும் திறனாய்விற்கு 25/12/22 அன்று பங்கு பெற உள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளும் பகவானின் பரிபூரண ஆசிகளை பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.
Jai Sairam.
Bhagawan Sri Sathya Sai Baba varu 97th Birthday Celebrations
இன்று காலை 11 மணி அளவில் பகவானின் பெருங்கருணையால் அமராவதி பாளையம் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி இனிதே துவங்கப்பட்டது
அதன் அமைப்பாளராக திரு சுதாகர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்
துவக்க விழா நிகழ்ச்சியில் அமிர்த கலசம் ஒருவருக்கு வழங்கப்பட்டது
இன்று மாலை 3 மணி அளவில் பகவானின் பெருங்கருணையால் குளத்து பாளையம் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி இனிதே துவங்கப்பட்டது அதன் அமைப்பாளராக திரு வெங்கட சுப்பிரமணியன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாய்ராம் திருப்பூர் ஸ்ரீ சத்திய சாய் மந்திரில் தீபாவளி திருவிழா வஸ்திர தானம், நாராயண சேவை சிறப்பாக நடைபெற்றது. சாய்ராம்.
SADHANA CAMP FOR DISTRICT COORDINATORS AND SAMITHI CONVENORS
Aum Sri Sairam With the divine blessings of our beloved Bhagawan Sri Sathya Sai Baba, following Events happened gracefully on 9th October 2022 at Sai Vihar, Ram Nagar, Tirupur District.
Timing : 9.00 am to 4.30 pm
Participants : 60 office bearers.
♦️ GURUS TRAINING – GROUP I
Timing : 9.00 Am to 4.30 pm
Participants : Around 42 members consisting of 30 new BV gurus participated in the training.
♦️ Swami’s Pallaku Sevai
Venue : Iduvai samithi, Tirupur.
Timing : 6.30 pm
Thankyou Jai Sairam
Tirupur Full moon Gurupoornima swamy pallaku seva on 09/10//2022 at Eduvai Samithi today.
புதிய பால விகாஸ் வகுப்புகள்
ஓம் ஸ்ரீ சாய்ராம், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஆசியுடன் விஜயதசமி நன்னாளில் 5/10/22 அன்று காலை திருப்பூர் மாவட்டம் காந்தி நகர் மற்றும் முத்துநகர் சமிதிகளின் சார்பில் புதிய பால விகாஸ் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது. 5 – 15 வயதிற்குட்பட்ட
தங்கள் குழந்தைகளை பாலவிகாஸ் வகுப்புகளில் சேர்த்து பயன்பெற வேண்டுகிறோம்.
பாலவிகாஸ் மையங்களின்
1.இடம்: காமாட்சி அம்மன் கோயில் முதல் வீதி, மாகாளியம்மன் கோயில் எதிரில், காந்திநகர்.
நேரம்: காலை 9.15 மணிக்கு.
தேதி: 5/10/2022.
போன்: 9486441201
- இடம்: அண்ணா காலனி முருகன் கோயில் அருகில்,
காந்திநகர்.
நேரம்: காலை 11 மணிக்கு.
தேதி: 05/10/2022.
போன்: 94864 41201 - இடம்: 3/690E, காமராஜ் நகர்,
சத்யா காலனி வடக்கு,
மன்னரை,
திருப்பூர்.
முத்து நகர் சமிதி.
நேரம்: காலை 11 மணிக்கு.
தேதி: 05/10/2022
போன்: 9842236056
ஜெய் சாய் ராம்.
Eye Camp in Mangalam Govt Higher Secondary School
School camp conducted in Mangalam Govt higher secondary school on 15/09/2022.
Eye Camp in Govt Higher Secondary School
School Eye Camp conducted in Govt. Higher Secondary School, Kanakampalayam on 14/09/2022 in Tirupur district.
காந்திநகர் சமிதியில் 32 வது ஆண்டு விழா
ஓம் ஸ்ரீ சாய்ராம் திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி. காந்திநகர் சமிதியில் 32 வது ஆண்டு விழா பகவானின் கருணையினால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலையில் ஓம்காரம், சுப்ரபாதம், நகர் சங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம், ஆரத்தியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை விளக்கு பூஜை, வேதம், பஜன், அதனை தொடர்ந்து பிரசாந்தி கொடி இறக்கம் பின் பகவானின் பல்லக்கு சேவை மற்றும் மாநில தலைவரின் சிறப்புரை ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் 61 பேர் கலந்து கொண்டனர்
ஓம் ஸ்ரீ சாய்ராம்🙏
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் பரிபூரண ஆசியினால்,
திருப்பூர் மாவட்ட அளவிலான யுவதிகள் மாநாடு (14.08.22) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
ஸ்ரீ சத்ய சாயி மந்திர், ராம் நகர், திருப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
🌹 திரு. ராஜேந்திரன், மாநில சேவை ஒருங்கிணைப்பாளர்.
🌹 திரு. அசோக் சுந்தரேசன், முன்னாள் மாவட்டத் தலைவர் (திருச்சி).
🌹 திரு. கே. ராஜேக்ஷ்வரன், மாவட்டத் தலைவர், திருப்பூர்.
🌹 திரு. ரூபேஷ் குமார், மாநில பேரிடர் மேலாண்மை இணை ஒருங்கிணைப்பாளர்.🌹 திருமதி. சாய் தேவி ரூபேஷ்குமார், மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்
(மகிளா).
🌹
செல்வி.தனுஷ்மா. டீ, முன்னாள் மாணவி, SSSIHL.
🌹 செல்வி. காயத்ரி. ஜே.எஸ், முன்னாள் மாணவி, SSSIHL.
ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், 48 யுவதிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 2022 – 2023 ஆண்டிற்கான செயல் திட்டம் சுவாமியின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிறைவாக மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சிகள் இனிதே முடிவடைந்தது.
ஜெய் சாய்ராம்.
Sairam with Swamy’s blessing Tirupur district SRP Beneficiaries program HIRUDAYA SANGAMAM conducted on 17th July SUNDAY Total 57 beneficiaries participated. Beneficiaries kind thanks giving to swamy from inner heart. Our SRP state coordinator gave motivational speeches for beneficiaries It was very useful for them
ஓம் ஸ்ரீ சாய்ராம். கடந்த 17 /7 /2022 ஞாயிற்றுக்கிழமை நமது அன்பு தெய்வத்தின் கிருபையால் இருதய சங்கமம் மற்றும் ரத்ததான முகாம் நிகழ்ச்சிகள் திருப்பூர் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில் சிறப்பாக நடைபெற்றது. சாய்ராம்
Sai Ram. With the grace and blessings of our beloved Swami, Sri Sathya Sai Skill Development Centre was inaugurated in presence of office bearers and members at Tirupur, Ram nagar Mandir.
The first batch is expected to start by next week. Beneficiaries and trainers have been identified.
Sai Ram.
Aum Sri Sairam With the divine blessings of our Beloved Baba the Convocation ceremony for Sri Sathya Sai Balvikas Diploma holders and District Level Talent Search Awards has been successfully conducted at Sri Sathya Sai Community Centre, Ram Nagar, Tirupur on 13.03.2022.
Around 110 members consisting of Balvikas children, Gurus and parents eagerly participated in the event.
Thank you..
Jai Sairam
Narayana Seva at Karamadai Car Festival
Sairam on 18 Feb 2022, We Distributed 800 Food Packets to Karamadai Car Festival. Mettupalayam Both Samithies and Veerapandi Samithi.
BHAGAWAN SRI SATHYA SAI BABA 96TH BIRTHDAY CELEBRATIONS
Aum Sri Sairam
With Divine’s blessings, In our Tirupur District we are happy to inform that the Swami’s 96th Birthday was celebrated gracefully at Pollachi, Mettupalayam, Udumalpet and Tirupur.
The special events and the service activities happened are as follows :
Tirupur
19/11/21:
Ligithajapam
Study Circle on the topic “The Gayatri Mantra”
Glass Painting Session
20/11/21 :
Sahasarama parayanam by BV Gurus
Bhajans
Cultural Events by BV Children
21/11/21 :
Blood Donation Camp :
Donated By – 35 Members
22/11/21 :
Visited Siva Sharmila Oldage Home and Distrubuted the Grocery items for them
23/11/21 :
Narayana Seva – For 3500 people belonging to Mannur Village, Vijayapuram, Pon Muthunagar, Ram Nagar
Special Talk on the topic “The Sri Sathya Sai Avatar” By Mr.M.Shesharaj,Cbe
Pollachi
18/11/21:
Vishnu Sahasranama Parayanam
Sathya Narayana Pooja
19/11/21:
Abirami Andaadhi Paarayanam
Thruvilaaku Poojai
20/11/21:
Sri Sathya Sai Family Satsang
21/11/21:
96 Special Bhajans at Kotturmalaiandipattinam Samithi
22/11/21:
Divine Musical evening Performance by Kottur Somandurai Chithoor Mr.Jayaprakash Sathyanarayanan
23/11/21:
Narayana Seva – 550
Udumalpet
23/11/21:
Narayana Seva – 700
Vastra Dhanam – 100
Special Talk on “The Glory of the Avatar – Sri Sathya Sai Baba” by Mrs.Selvi.M
Mettupalayam
23/11/21 :
Narayana Seva – 100
Vastara Dhanam – For 50 Tribal people at Vivekanandar kudhil, Thimmambaadi.
Evening 96 Special Bhajans
Further Swami’s Birthday celebrations began with Omkaaram, Subrabaatham, Nagarasankeerthanam, Homams, veda parayanam, Cake cutting ceremony, Jhoola and Mangala Aarathi at all the places.
Thankyou
Jai Sairam
Navarathiri – Day 2 celebration
Sairam, With Swami’s grace on 7/10/21 evening 5pm to 7pm at Ram Nagar mandir – Tiruppur, Navarathiri – Day 2 celebration went on well with Lalitha Sahasranama parayanam, Astothra parayanam, bhajan followed by a speech about Navarathiri by Mrs.Prema sairam.
Nearly 15 balvikas gurus participated along with 40 sai members. Jai sairam
Tirupur District
Sairam with the blessings of Swami Covid vaccine camp currently in progress for 150 sevadals and general public in Tirupur city at Sri Sathya Sai Mandir, Tirupur (18-44 category 78 nos, above 45 category 72 nos ) . The above camp organized with the support of Sri. Sridharan Kilkatalai convenor sairam .
Sri Sivasubramanium S, District President, Tirupur District