District President: Sri Arivalagan S
Email: [email protected]
AUM SRI SAIRAM
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் பகவானின் அனுக்கிரகத்தினால் 05 08 2023 ஆம் தேதி காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை சக்தி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் பிரேமதரு முப்பது மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு நாராயண சேவை செய்யப்பட்டது இதில் சுமார் 50 நபர்கள் பயனடைந்தனர். இதில் சாய் அன்பர்கள் 15 நபர்களும் DBS Head office ல் இருந்து 30 நபர்களும் கலந்து கொண்டனர்
நாராயண சேவை 16.07.2023
கரூர் மாவட்டத்தில் 16.07.23 ஆம் தேதி சணப்பிரட்டி சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை செய்யப்பட்டது. 9 ஆண்கள், 18 மகிளாஸ், 2 யுவதிகள், 2 இளைஞர்கள் கலந்து கொண்டனர்
Beneficiaries – 40
பிரேம தரு- மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 16.07.2023
கரூர் மாவட்டத்தில் 16.07.23 ஆம் தேதி சணப்பிரட்டி சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தின் பின்புறம் உள்ள கார்டனில் பிரேம தரு – 10 மரக்கன்றுகள் நடப்பட்டன, 9 ஆண்கள், 18 மகிளாஸ், 2 யுவதிகள், 2 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
1008 காயத்ரி மந்திரம் ஜபம் 09.07.2023
கரூர் மாவட்டத்தில் 09.07.2023 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1008 காயத்ரி மந்திரம் ஜபம் செய்யப்பட்டது. இதில் 13 ஆண்கள், 2 பாலவிகாஸ் குழந்தைகள், 19 மகிளாஸ், 4 யுவதிகள், 4 இளைஞர்கள் கலந்து கொண்டனர்,
முதியோர் இல்லத்தில் தூய்மை பணி
கரூர் மாவட்டத்தில் 11.06.2023 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் 14.30 மணி வரை புன்னம் சத்திரத்தில் உள்ள சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் தூய்மை பணி செய்தும், அங்குள்ள முதியோர்களுக்கு சுத்தம், சுகாதாரம் மற்றும் நன்னெறி வகுப்புகள் நடத்தியும், அவர்களுக்கு தேவையான முதலுதவியும் செய்யப்பட்டது, பின்னர் முதியோர்களுக்கு பாத பூஜை செய்தும் சிறப்பு பஜன் செய்யப்பட்டது, இதில் 6 ஆண்கள், 4 மகிளாஸ், 4 யுவதிகள், 4 இளைஞர்கள் கலந்து கொண்டனர்,
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 10 தேதி வரை தொடர்ந்து சனி ஞாயிறு இரண்டு நாட்களிலும் முதல் மற்றும் இரண்டு பாச் (batch) ஆக கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக கற்றுத் தரப்பட்டது
கரூர் மாவட்டத்தில் 28.05.2023 ஆம் தேதி சணப்பிரட்டி சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை செய்யப்பட்டது
நீர்மோர் சேவை
கரூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, 22.05.23 முதல் 31.05.23 வரை மாரியம்மன் கோவில் அருகில் நீர்மோர் சேவை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, இதில் 5 ஆண்கள், 10 மகிளாஸ், 5 யுவதிகள், 4 இளைஞர்கள் என மொத்தம் 24 சாய் அன்பர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 6500 பயனாளிகள் பயனடைந்தனர்.
ஸ்ரீ சத்யா சாய் ஆராதனை மஹோத்சவம்
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் 24.04.2023 ஆம் தேதி சுவாமியின் ஆராதனை தினத்தை முன்னிட்டு 05.04.2023 ஆம் தேதி முதல் 20 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு சாய் அன்பர் வீட்டிலும் பஜன் நடைபெற்றது. ஆராதனை தினத்தன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை காந்திகிராமம் வாட்டர் டேங்க் அருகில் நீர்மோர் சேவையும் , மாலை 06.30 மணி முதல் 8:30 மணி வரை பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பஜன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3 ஆண்கள் , 5 இளைஞர்கள், 8 மகிளாஸ், 6 யுவதிகள், 4 பால விகாஸ் குழந்தைகள் ஆக மொத்தம் 26 நபர்கள் கலந்து கொண்டனர்.
ரமலான் பண்டிகை சேவை
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் 22.04.2023 ஆம் தேதி ரமலான் பண்டிகை முன்னிட்டு திருமாநிலையூர் மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சுமார் 1500 முஸ்லிம் சகோதரர்களுக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 5 ஆண்கள் , 5 இளைஞர்கள், 6 மகிளாஸ், 3 யுவதிகள் ஒரு பால விகாஸ் குழந்தை ஆக மொத்தம் 20 நபர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்
மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 16.04.2023 ஆம் தேதி சணப்பிரட்டி சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை செய்யப்பட்டது. இதில் 30 பயனாளிகள் பயனடைந்தனர் . இந்த சேவையில் 10 சாய் அன்பர்கள் கலந்து கொண்டனர்
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 02.04.23 ஆம் தேதி “கரிஷ்யே வசனம் தவ ” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆன்மீக சாதனா முகாம் நடைபெற்றது. இந்த ஆன்மீக சாதனா முகாமை மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் கணபதி சாய்ராம் அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரஸ்வதி சாய்ராம் ஆகியோர்கள் வந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தனர் இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 35 நபர்கள் (ஆண்கள் 14 பெண்கள் 13 இளைஞர்கள் 8 ) கலந்து கொண்டனர். ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஜெய் சாய்ராம்
பாலவிகாஸ் குழந்தைகளின் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பஜன்
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 30.03.2023 ஆம் தேதி ஸ்ரீ ராமநவமி தினத்தை முன்னிட்டு காந்திகிராமம் சமிதியில் பாலவிகாஸ் குருமார்கள் நடத்திய “இராமயணத்திலிருந்து சில நிகழ்வுகள்” நாடகம் மற்றும் பாலவிகாஸ் குழந்தைகளின் “லவ குசா” நாடக நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பஜன் நடைபெற்றது, இதில் சாய் அன்பர்கள் ஆண்கள் 3 , பெண்கள் 17, யுவதிகள் 10, பாலவிகாஸ் குழந்தைகளின் பெற்றோர் உட்பட 30 நபர்கள் கலந்து கொண்டனர்.
கணினி வகுப்புகள் துவக்கம்
கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு ஸ்ரீ சத்ய சாய் காயத்ரி நிவாஸ். இன்று 19.03.23 ஆம் தேதி மகிளாஸ் தினத்தினை முன்னிட்டு சமிதி கன்வீனர் மற்றும் கரூர் மாவட்ட ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் திருமதி நாமகிரி சாய்ராம் அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி கணிணி பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 4 மகிளாஸ், 5 ஆண்கள், 2 ஆண் இளைஞர்கள் மற்றும் 9 பால விகாஸ் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் வகுப்புகள் தொடக்க விழா
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 12.03.2023 ஆம் தேதி புலியூர் கிராமம் தத்தெடுக்கப்பட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு பால விகாஸ் வகுப்பு நடத்தப்பட்டது
ஜெய் சாய்ராம்
இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 12.03.2023 ஆம் தேதி சணப்பிரட்டி கிராமம் தத்தெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கிராம குழந்தைகளுக்கு பாலவிகாஸ் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது
ஜெய் சாய்ராம்
மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் 05.03.23ம் தேதி சணப்பிரட்டி சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை செய்யப்பட்டது.
ஜெய் சாயிராம்
தம்பதியருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 03.02.23- ம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில் தம்பதியருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.
ஜெய் சாய்ராம்
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சர்டிபிகேட் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டம் ;
மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் கரூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சர்டிபிகேட் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது (21.01.2023)
நாராயண சேவை
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் 26.01.2023 சணப்பிரட்டி சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை நடைபெற்றது.
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் டெய்லரிங் வகுப்பு (3rd Batch – 45 days) முடித்த நபர்களுக்கு 05.02.23 அன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
தை அமாவாசை தினத்தன்று இயற்கை பேராண்மை முதலுதவி சேவை
கரூர் மாவட்டத்தில் இருந்து சேவாதள தொண்டர்கள் 21.01.2023 ம் தேதி தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இயற்கை பேராண்மை முதலுதவி சேவை செய்தனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் ஸ்ரீசத்யசாய் காயத்ரி நிவாஸ் சமிதியில் தொழிற்பயிற்சி கற்று வரும் நபர்கள் மற்றும் சாய் அன்பர்கள் அனைவரும் சேர்ந்து 13.01.2023 ம் தேதி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியும், விளையாட்டு போட்டிகள் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆருத்ரா தரிசனம் தினத்தன்று சிறப்பு பஜன்
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் உள்ள மதுரை ஆதினம் பஜனை மடத்தில் 06.01.2023-ம் தேதி ஆருத்ரா தரிசனம் தினத்தன்று சிறப்பு பஜன் நடைபெற்றது.
நாராயண சேவை
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் பகவானின் அனுக்ரஹத்தினால் 18.12.2022 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சணப்பிரட்டி சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி இல்லத்தில் நாராயண சேவை நடைபெற்றது.
ஜெய் சாயிராம்
ஸ்ரீ ஸத்யஸாயி ப்ரேமானுக்ரஹ உத்ஸவம்
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் 10.12.2022 & 11.12.2022 ஆகிய தேதிகளில் ஸ்ரீ ஸத்யஸாயி ப்ரேமானுக்ரஹ உத்ஸவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
10.12.2022 – ம் தேதி ;
ஓம்காரம், சுப்ரபாதம், ஏகாதசருத்ரம், ஆரத்தி மற்றும்
ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜபம்
மஹாமங்கள ஆரத்தி நடைபெற்றது.
11.12.2022 – ம் தேதி ;
ஓம்காரம், ஸூப்ரபாதம்,
ஸ்ரீருத்ரஹோமம்,
தம்பதிகள் அபிஷேகம்,
மாங்கல்ய தாரணம்,
மஹாமங்கள ஆரத்தி. மாலை நிகழ்ச்சியாக
ஸத்ஸங்கம்,
மஹாமங்கள ஆரத்தி நடைபெற்றது.
ஜெய் சாயிராம்
ஓம் ஸ்ரீசாய்ராம். கரூர் மாவட்டத்தில் 22.11.2022ம் தேதி சத்ய சாய் விரத கல்ப பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 23.11.2022ம் தேதி ஸ்வாமியின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
ஜெய் சாய்ராம்.
Aum Sri Sai Ram. Mahilas day program in Karur district
கரூர் மாவட்டத்தில் இன்று 20.11.22ம் தேதி தத்தெடுத்த கிராமமான காமராஜ் நகரில் சுமார் 250 உணவு பாக்கெட், ஸ்வீட், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
பகவானின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு 97 பஜன் பாடல்கள்
ஓம் ஶ்ரீ சாயிராம். 16.10.22- ம் தேதி கரூர் மாவட்டத்தில் பகவானின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு 97 பஜன் பாடல்கள் பகவானின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜெய் சாயிராம்
ப்ரகதிபதம்
ஓம் ஶ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் இன்று 11.09.2022ம் தேதி காலை 09.00 முதல் மாலை 04.00 மணி வரை காந்திகிராமம் சமிதியில் “ப்ரகதிபதம்” சத்சங்கம் நடைபெற்றது. இதில் ஆண்கள், மகிளாஸ் மற்றும் யுவதிகள் 20 நபர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய் சாயிராம்
பெண்களுக்கு இலவச தையல் தொழில் பயிற்சி
ஓம் ஶ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் ஶ்ரீ சத்ய சாயி காயத்ரி மந்திரில் பெண்களுக்கு இலவசமாக தையல் தொழில் பயிற்சி கற்று கொடுக்கப் படுகிறது. கடந்த 25.07.22ம் தேதி முதல் 10.09.22ம் தேதி வரை 45 நாட்கள் பயிற்சி முடித்த முதல் பேட்ச் நபர்களுக்கு இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
பிரசாந்தி சேவா சாதனா முகாம்- கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள்
ஓம் ஶ்ரீ சாயிராம் பகவானின் ஆசிவாதத்துடன் கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள் இனைந்து நடத்திய பிரசாந்தி சேவா சாதனா முகாம் கரூர் மாவட்டத்தில் இன்று 28.08.2022 பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 இனிதே நடந்து முடிந்தது. சுமார் 75 (ஆண்கள் மற்றும் மகளிர்) சேவாதள தொண்டர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
ஜெய் சாய்ராம்.
கரூர் மாவட்டத்தில் இன்று (28.08.2022) பிரசாந்தி சேவா சாதனா முகாம் கரூர் அமிர்தம் மஹாலில் நடைபெற்றது. இதில் கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட சேவா தொண்டர்கள் சுமார் 75 நபர்கள் கலந்து கொண்டனர்.
ஓம் ஶ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் 21.08.2022ம் தேதி சக்தி மனநலம் குன்றியோர் காப்பகத்தில் நாராயண சேவை சிறப்பாக நடைபெற்றது. ஜெய் சாயிராம்
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் இன்று 22.07.22ம் தேதி ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை ஸ்ரீ சத்ய சாயி காயத்ரி மந்திர் சமிதியில்
நடைபெற்றது. இதில் சுமார் 25 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய் சாயிராம்
இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு
ஓம் ஶ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் இன்று 17.07.2022ம் தேதி இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு ஶ்ரீ சத்யசாய் காயத்ரி நிவாஸ் சமிதியில் நடைபெற்றது. இதில் ஆண்கள் 15 பெண்கள் 40 மொத்தம் 55 சாய் அன்பர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
சிவன்கோவிலில் உழவாரப்பணி
சாய்ராம், கரூர் மாவட்டத்தில் இன்று 12-06-22ம் தேதி சணப்பிரட்டி சிவன்கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் ஆண்கள் 15 பெண்கள் 10 சாய் அன்பர்கள் கலந்துகொண்டனர்.
நீர்மோர் சேவை
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் இன்று 08.05.22ம் தேதி காந்திகிராமத்தில் நீர்மோர் சேவை நடைபெற்றது.
ஜெய் சாயிராம்.
ஓம் ஶ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இரண்டு இடங்களில் நீர் மோர் மற்றும் குடிநீர் 13.05.2022 தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவை 13.05.2022 முதல் 25.06.2022 தேதி வரை நடைபெறும்.
இப்படிக்கு சமிதி கன்வீனர்கள்.
இந்த சேவையில் பங்கு பெற விரும்பும் சாய் அன்பர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
9894565815
9944664450
9894602232
ஜெய் சாயிராம்
ஈஸ்வராம்மா தின சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம். ஈஸ்வராம்மா தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மார்களுக்கும் புதிய ஆடைகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது
ஜெய் சாய்ராம்
ரம்ஜான் சேவை
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் இன்று 03.05.2022 ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொழுகையை முடித்து வரும் சுமார் 2000 முஸ்லிம் சகோதரர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்து ஜூஸ் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
நீர் மோர் சேவை
ஓம் ஶ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் இன்று 01.05.2022ம் தேதி காலை 11.30 மணிக்கு வெண்ணமலை பஸ் ஸ்டாப் அருகில் நீர் மோர் சேவை நடைபெற்றது.
ரதசப்தமி தினத்தை முன்னிட்டு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திர பாராயணமும் ஸுதர்சன ஹோமமும்
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் ஸ்ரீ சத்யசாயி காயத்ரி மந்திர் சமிதியில் இன்று 08.02.2022ம் தேதி காலை 7 மணி முதல் 10.45 மணி வரை ரதசப்தமி தினத்தை முன்னிட்டு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திர பாராயணமும் ஸுதர்சன ஹோமமும் நடைபெற்றது.
ஜெய் சாயிராம்
சமிதியில் சுத்தம் செய்யும் பணி
சாயிராம், கரூர் மாவட்டத்தில் 30.01.2022ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வி.வி.ஜி நகர் சத்யசாயி காயத்ரி மந்திர் சமிதியில் சுத்தம் செய்யும் பணியும் வெள்ளை அடிக்கும் பணியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 8 ஆண்களும் 4 பெண்களும் கலந்து கொண்டனர். ஜெய் சாயிராம்
தை மாதம் மூன்றாவது வெள்ளிகிழமையை திருவிளக்கு பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 28.01.2022ம் தேதி தை மாதம் மூன்றாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 06.30 மணி முதல் 07.45 மணி வரை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 20 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர்.
திருவிளக்கு பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 21.01.2022ம் தேதி தை மாதம் இரண்டாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 06.30 மணி முதல் 07.45 மணி வரை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெளர்ணமியை முன்னிட்டு ஆன்லைன் சத்யநாராயண பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 17.01.2022ம் தேதி பெளர்ணமியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 05.45 மணி முதல் 07.30 மணி வரை சத்யநாராயண பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 25 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர்
தை மாதம் விளக்கு பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 14.01.2022ம் தேதி தை மாதம் முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 06.30 மணி முதல் 07.45 மணி வரை விளக்கு பூஜை நடைபெற்றது
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 13.01.2022ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவு 10.00 மணி முதல் 14.01.2022ம் தேதி காலை 06.00 மணி வரை வேத பாராயணம், திருப்பாவை, திருவெம்பாவை, சாயிபஜன், மஹாமங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் 15 சாய் அன்பர்கள் கலந்து கொண்டனர்.
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் சத்ய சாயிபாபா அவர்களின் அனுக்கிரகத்தினால் 09.01.2022ம் தேதி சத்ய சாயி பஜன் சாதனா முகாம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் திருமதி.I.S.கவிதா முரளி அவர்கள், தமிழ்நாடு மற்றும் கல்பனா சுப்பிரமணியம் அவர்கள், சென்னை பெருநகர் ஆகியோர்கள் நடத்திய இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 28 சாயி அன்பர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கிருஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்
கரூர் மாவட்டத்தில் கிருஸ்துமஸ் தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவில் 75 பாலவிகாஸ் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
BHAGAWAN SRI SATHYA SAI BABA BIRTHDAY CELEBRATIONS
ஶ்ரீ சத்யசாய் பாபா அவர்களின் 96வது ஜெயந்தி மஹோத்ற்சவம் தின விழா நிகழ்ச்சிகள் –
கரூர் மாவட்டம். இடம் : காந்திகிராமம் மற்றும் வெங்கமேடு சமிதி.
ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் 17.8.2021லிருந்து தொடர்ச்சியாக 96 நாட்கள் சாயி அன்பர்கள் வீட்டில் ஹவுஸ் பஜன் நடைபெற்றது.
19.11.21 – மகிளாஸ் தினத்தன்று ஓம்காரம், சுப்ரபாதம், ஸத்ய ஸாய் அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம், துர்கா அஷ்டோத்திரம் பாராயணம் நடைபெற்றது.
20.11.21 – ஸாய் ஸஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது.
21.11.21 – தத்தெடுத்த கிராமத்தில் ஓம்காரம், சுப்ரபாதம், வேதப்பாராயணம், கிராம கோயிலில் அபிஷேகம், ஸத்ய ஸாய் பல்லக்கு வீதியுலா, பாலவிகாஸ் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், 200 நபர்களுக்கு நாராயண சேவை நடைபெற்றது.
22.11.21 – ஓம்காரம், சுப்ரபாதம், வேதப்பாராயணம், பாலவிகாஸ் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், இரவு 10.00 மணிக்கு சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் 10 ஆதரவற்ற நபர்களுக்கு போர்வை போர்த்தி விடப்பட்டது.
23.11.21- ஓம்காரம், சுப்ரபாதம், அபிஷேகம், ஸாய் ஸஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. 50 சாய் அன்பர்கள் இல்லங்களில் ஸ்வாமியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் சமிதியில் ஸத்சங்கம், சமிதியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சாய் அன்பர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாலை வேதப் பாராயணம், சிறப்பு பஜன், ஸ்வாமிக்கு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
மஹாமங்கள ஆரத்தி. பின்னர் அன்பாலயம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று பஜன்,ஸ்வாமிக்கு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு இரவு டிபன் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. ஸ்வாமியின் பிறந்த நாள் விழாவில் லட்டு, விபூதி பிரசாதம் 500 நபர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 13-11-21ம் தேதி மாலை 06.00 மணி முதல் 14-11-21ம் தேதி மாலை 06.00 வரை நடை பெற்ற அகண்டபஜனில் 10 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் கலந்து கொண்டனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓம் ஶ்ரீ சாய் ராம்
10.10.2021 ம் தேதி கரூர் மாவட்டத்திலிருந்து கொடைக்கானல் ஆன்மிக சுற்றுலாவாக சாய் ஸ்ருதி-க்கு 50 mahilas மற்றும் 20 gents மற்றும் 10 குழந்தைகளுடன் சென்று நவராத்ரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழா சிறப்புக்கள்:
1)ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் நடத்தப்பட்டது.
2)அதனை தொடர்ந்து காயத்ரி மாதா கோவிலில் லலிதா சஹஸ்ர நாமாவளி மற்றும் லக்ஷ்மி நாமாவளி பாராயணம் செய்யப்பட்டது.
3)Balavikas குழந்தைகள் மற்றும் இதர குழந்தைகளுக்கு நவராத்ரி முன்னிட்டு Durga மாதா பூஜை செய்யப்பட்டது.
4)சிறப்பு பஜன் நடத்தப்பட்டது.
5)மதுரை மாவட்டம் District Seva coodinator சேவையின் முக்கியத்தை பற்றி சிறப்புரை வழங்கினார்.
6)மதுரை மாவட்டம் D.P திரு.நாராயண சுவாமிஅவர்கள் ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார்.
7)மேலும் சுவாமி ரெசிடென்ட் சுத்தம் செய்யும் பணி மற்றும் கேன்டீன் சேவை ஆகியவற்றில் கரூர் மாவட்ட சேவாதள தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டதில் இருந்து வந்து இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு பொருள்கள், காயத்ரி மாதா படம், சத்ய சாய்பாபா ஸ்வாமியின் படம் மற்றும் பிரசாதம் ஆகியவை ஸ்வாமியால் வழங்கப்பட்டது.அவ்வகையில் நாம் எல்லாரும் பகவானுக்கு நன்றி கூறிகொண்டு நம் பக்தியை செலுத்துவோம்.- கரூர் மாவட்ட தலைவர்