District President: Sri Arivalagan S
Email: arivalaganatlas@gmail.com
AUM SRI SAIRAM
ரதசப்தமி தினத்தை முன்னிட்டு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திர பாராயணமும் ஸுதர்சன ஹோமமும்
ஓம் ஸ்ரீ சாயிராம். கரூர் மாவட்டத்தில் ஸ்ரீ சத்யசாயி காயத்ரி மந்திர் சமிதியில் இன்று 08.02.2022ம் தேதி காலை 7 மணி முதல் 10.45 மணி வரை ரதசப்தமி தினத்தை முன்னிட்டு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திர பாராயணமும் ஸுதர்சன ஹோமமும் நடைபெற்றது.
ஜெய் சாயிராம்
சமிதியில் சுத்தம் செய்யும் பணி
சாயிராம், கரூர் மாவட்டத்தில் 30.01.2022ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வி.வி.ஜி நகர் சத்யசாயி காயத்ரி மந்திர் சமிதியில் சுத்தம் செய்யும் பணியும் வெள்ளை அடிக்கும் பணியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 8 ஆண்களும் 4 பெண்களும் கலந்து கொண்டனர். ஜெய் சாயிராம்
தை மாதம் மூன்றாவது வெள்ளிகிழமையை திருவிளக்கு பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 28.01.2022ம் தேதி தை மாதம் மூன்றாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 06.30 மணி முதல் 07.45 மணி வரை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 20 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர்.
திருவிளக்கு பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 21.01.2022ம் தேதி தை மாதம் இரண்டாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 06.30 மணி முதல் 07.45 மணி வரை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெளர்ணமியை முன்னிட்டு ஆன்லைன் சத்யநாராயண பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 17.01.2022ம் தேதி பெளர்ணமியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 05.45 மணி முதல் 07.30 மணி வரை சத்யநாராயண பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 25 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர்
தை மாதம் விளக்கு பூஜை
சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 14.01.2022ம் தேதி தை மாதம் முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு ஆன்லைன் மூலம் மாலை 06.30 மணி முதல் 07.45 மணி வரை விளக்கு பூஜை நடைபெற்றது

சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 13.01.2022ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவு 10.00 மணி முதல் 14.01.2022ம் தேதி காலை 06.00 மணி வரை வேத பாராயணம், திருப்பாவை, திருவெம்பாவை, சாயிபஜன், மஹாமங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் 15 சாய் அன்பர்கள் கலந்து கொண்டனர்.

ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் சத்ய சாயிபாபா அவர்களின் அனுக்கிரகத்தினால் 09.01.2022ம் தேதி சத்ய சாயி பஜன் சாதனா முகாம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் திருமதி.I.S.கவிதா முரளி அவர்கள், தமிழ்நாடு மற்றும் கல்பனா சுப்பிரமணியம் அவர்கள், சென்னை பெருநகர் ஆகியோர்கள் நடத்திய இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 28 சாயி அன்பர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கிருஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்
கரூர் மாவட்டத்தில் கிருஸ்துமஸ் தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவில் 75 பாலவிகாஸ் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
BHAGAWAN SRI SATHYA SAI BABA BIRTHDAY CELEBRATIONS
ஶ்ரீ சத்யசாய் பாபா அவர்களின் 96வது ஜெயந்தி மஹோத்ற்சவம் தின விழா நிகழ்ச்சிகள் –
கரூர் மாவட்டம். இடம் : காந்திகிராமம் மற்றும் வெங்கமேடு சமிதி.
ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் 17.8.2021லிருந்து தொடர்ச்சியாக 96 நாட்கள் சாயி அன்பர்கள் வீட்டில் ஹவுஸ் பஜன் நடைபெற்றது.
19.11.21 – மகிளாஸ் தினத்தன்று ஓம்காரம், சுப்ரபாதம், ஸத்ய ஸாய் அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம், துர்கா அஷ்டோத்திரம் பாராயணம் நடைபெற்றது.
20.11.21 – ஸாய் ஸஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது.
21.11.21 – தத்தெடுத்த கிராமத்தில் ஓம்காரம், சுப்ரபாதம், வேதப்பாராயணம், கிராம கோயிலில் அபிஷேகம், ஸத்ய ஸாய் பல்லக்கு வீதியுலா, பாலவிகாஸ் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், 200 நபர்களுக்கு நாராயண சேவை நடைபெற்றது.
22.11.21 – ஓம்காரம், சுப்ரபாதம், வேதப்பாராயணம், பாலவிகாஸ் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், இரவு 10.00 மணிக்கு சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் 10 ஆதரவற்ற நபர்களுக்கு போர்வை போர்த்தி விடப்பட்டது.
23.11.21- ஓம்காரம், சுப்ரபாதம், அபிஷேகம், ஸாய் ஸஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. 50 சாய் அன்பர்கள் இல்லங்களில் ஸ்வாமியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் சமிதியில் ஸத்சங்கம், சமிதியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சாய் அன்பர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாலை வேதப் பாராயணம், சிறப்பு பஜன், ஸ்வாமிக்கு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
மஹாமங்கள ஆரத்தி. பின்னர் அன்பாலயம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று பஜன்,ஸ்வாமிக்கு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு இரவு டிபன் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. ஸ்வாமியின் பிறந்த நாள் விழாவில் லட்டு, விபூதி பிரசாதம் 500 நபர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
ஓம் ஸ்ரீ சாய்ராம். கரூர் மாவட்டத்தில் 13-11-21ம் தேதி மாலை 06.00 மணி முதல் 14-11-21ம் தேதி மாலை 06.00 வரை நடை பெற்ற அகண்டபஜனில் 10 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் கலந்து கொண்டனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓம் ஶ்ரீ சாய் ராம்
10.10.2021 ம் தேதி கரூர் மாவட்டத்திலிருந்து கொடைக்கானல் ஆன்மிக சுற்றுலாவாக சாய் ஸ்ருதி-க்கு 50 mahilas மற்றும் 20 gents மற்றும் 10 குழந்தைகளுடன் சென்று நவராத்ரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழா சிறப்புக்கள்:
1)ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் நடத்தப்பட்டது.
2)அதனை தொடர்ந்து காயத்ரி மாதா கோவிலில் லலிதா சஹஸ்ர நாமாவளி மற்றும் லக்ஷ்மி நாமாவளி பாராயணம் செய்யப்பட்டது.
3)Balavikas குழந்தைகள் மற்றும் இதர குழந்தைகளுக்கு நவராத்ரி முன்னிட்டு Durga மாதா பூஜை செய்யப்பட்டது.
4)சிறப்பு பஜன் நடத்தப்பட்டது.
5)மதுரை மாவட்டம் District Seva coodinator சேவையின் முக்கியத்தை பற்றி சிறப்புரை வழங்கினார்.
6)மதுரை மாவட்டம் D.P திரு.நாராயண சுவாமிஅவர்கள் ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார்.
7)மேலும் சுவாமி ரெசிடென்ட் சுத்தம் செய்யும் பணி மற்றும் கேன்டீன் சேவை ஆகியவற்றில் கரூர் மாவட்ட சேவாதள தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டதில் இருந்து வந்து இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு பொருள்கள், காயத்ரி மாதா படம், சத்ய சாய்பாபா ஸ்வாமியின் படம் மற்றும் பிரசாதம் ஆகியவை ஸ்வாமியால் வழங்கப்பட்டது.அவ்வகையில் நாம் எல்லாரும் பகவானுக்கு நன்றி கூறிகொண்டு நம் பக்தியை செலுத்துவோம்.- கரூர் மாவட்ட தலைவர்