District President: Sri Singaravelu T.O.
Email: saisingaram@yahoo.co.in
Aum Sri Sairam





நாளை 24.04.2022 (ஞாயிற்றுக்கிழமை), பகவான் பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடுஶ்ரீசத்யசாயி மந்தர்ல் ,விடியற்காலை 5.00 மணிமுதல் 6.00 மணி வரை ஓம்காரம், ஜோதி தியானம் & சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனமும், காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.39 மணிவரை திருவாசகம் முற்றோதல் நிகழ்வும், மாலையில் சஹஸ்ர நாமார்ச்சனை, சிறப்பு பஜனும் மஹா மங்கள ஆரத்தியும் நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்படும்.அனைவரும் பங்குபெற்று பலனடைய வேண்டுகின்றோம்…









நேற்று ,14.01.2022தைத்திங்கள் ஒன்றாம் நாள் (வெள்ளிக் கிழமை)முதல் திருச்செங்கோடு ஶ்ரீசத்ய சாயி் மந்திர்ல் ,தினந்தோறும் காலை 5 மணி முதல் 6 மணி வரை ,ஓம்காரம் ,ஜோதி தியானம் ,சுப்ரபாதம் ,நகர ஸங்கீர்த்தனம் ,365 நாட்களும் நடத்தலாம் ,என தீர்மானிக்கப்பட்டு ,நேற்றும் இன்றும் சிறப்பாக நடந்தேறின. சுவாமி நிறைய தடவை குறிப்பிட்டுள்ளார்…”பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் , உடனடியாக என்னை வந்தடைகின்றன”!எனவே தினந்தோறும் ,பிரம்ம முகூர்த்த வேளையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ,அனைத்து பக்தர்களும்,விடியற்காலையில் ,சரியாக ஐந்து மணிக்கு மந்திர்க்கு வந்து ,ஓம்காரம் ஜோதி தியானம் ,சுப்ரபாதம் நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் !சாய்ராம்!
NB: பர்த்தியில் அவதரித்த அர்த்த நாரீஸ்வர்ராம் ,சுவாமியின் பிரசாந்தி நிலையத்தின் ,சிறு பிம்பமாக சுவாமியால் உருவாக்கப்பட்டுள்ள ,திருச்செங்கோட்டு, அர்த்தநாரீஸ்வர திருதலத்தின் “பிரசாந்தி மந்திர்” மகிமையை உணர்ந்து,அனுபவிக்க வேண்டுகிறேன்
சாயிராம்! நாமக்கல் மாவட்ட ஶ்ரீ சத்ய சாயி நிறுவனம் சார்பில் திருச்செங்கோடு ஶ்ரீ சத்ய சாயி மந்திர்ல் கார்த்திகை கடைசி தினத்திலிருந்து இன்று (தைத்திங்கள் -1)வரை,நாள்தோறும் ஓம்காரம், ஜோதி தியானம், சுப்ரபாதம்& நகர சங்கீர்த்தனம் சிறப்பாக நடந்தேறியது!
நேற்று வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு அலங்கார அபிஷேக,ஆராதனை கள் நடைபெற்று , சொர்க்கவாசல் திறப்பும் இனிதே நடந்தன.
ஆஞ்சனேய ஜெயந்தி , மந்திர்ல் எழுந்தருளியுள்ள ,பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டன!
NB:சில போட்டோக்கள் தங்கள் பார்வைக்கு










New Years Day Celebrations – Nagarsankirtan





Tiruchengodu VidyaaVikas Girls students of 80 members, on the eve of Full Moon day, went around the Tiruchengodu Hill & on the way visited the Sai Mandir also

29.10.2021
நாமக்கல் மாவட்டம் சார்பில் ,”பகவான் பாபா “அவர்களின் 96 வது அவதார தினத்தை கொண்டாடும் விழாவின் ஓர்அங்கமாக , தீபாவளி பண்டிகைக்கு முன்பு ,100 ஆண்களுக்கு வேஷ்டி சட்டையும், 100 பெண்களுக்கு சேலை, இரவிக்கை வழங்கும் நிகழ்வு , இன்று , 100 ஆண்டு வாழ்ந்து நமக்கு என்றும் ஊக்கமும் உற்சாகமும் தந்து கொண்டிருந்த மறைந்த பெரியவர் T.M.காளியண்ண கவுண்டர் அய்யா , அவர்களது இல்லத்தில் , அவரது மகன் வழக்கறிஞர் T.M.K.இராஜேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப் பட்டது!








சாய்ராம். இன்று 19.11.2021 கார்த்திக்கை தீபத்தை முன்னிட்டு திருச்செங்கோடு, சாய் மந்திரில் தீப விளக்கு ஏற்றியது. ஜெய் சாய்ராம்,




மகிளாஸ் தினத்தையொட்டி குத்து விளக்கு பூஜை
இன்று செவ்வாய் கிழமை சஹஸ்ர நாமம் அர்ச்சனையில் 2 பேர் கலந்து கொண்டனர். ஜெய் சாய்ராம்
சாய்ராம். இன்று மகிளாஸ் தினத்தையொட்டி குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. ஜெய் சாய்ராம்.




சீரடி சாய் பாபா மஹா சமாதி தின விழா
சாய்ராம். இன்று சீரடி சாய் பாபா மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சாய் பஜன் நடைபெற்றது. ஜெய் சாய் ராம்.








சாய்ராம். இன்று 15.10.2021, சீரடி சாய் பாபா மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சத்சரிதம் புத்தகம் படித்தது. ஜெய் சாய் ராம்.





